இளைஞர்மணி

பயனுள்ள தகவல் பரிமாற்றம்!

10th Nov 2020 06:00 AM | -எம்.அருண்குமார்

ADVERTISEMENT

 

பயனுள்ள தகவல் பரிமாற்றம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மிகவும் முக்கியமானது.கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலை ஏற்பட்டது.

இவ்வாறு தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்காக பணியாளர்கள் இவ்வாறு வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்யும் சூழ்நிலை உருவானதால் அவர்களுக்கு தேவையான தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கு அந்த நிறுவனத்தின் மனித வளத்துறை ஒரு தகவல் பரிமாற்ற மையமாக செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. பொருளாதார நிபுணர்கள் நடத்திய ஓர் ஆய்வில், பயனுள்ள தகவல் பரிமாற்றம் ஒரு நிறுவனத்தில் இல்லாவிட்டால் பணியில் காலதாமதம், தோல்வி, ஒழுக்கக் குறைபாடு, நிர்ணயிக்கப்பட்ட நோக்கத்தை அடைய முடியாத நிலை, விற்பனையில் பாதிப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு சில முக்கிய வழிகளைப் பின்பற்றி ஒரு நிறுவனத்தின் உள் தகவல் தொடர்பை மேம்படுத்தலாம்.

ADVERTISEMENT

கூடுதல் கவனம்:

நேருக்கு நேர் பிறருடன் பேசும்போது இருப்பதை விட அதிக கவனம் விடியோ மீட்டிங் மூலம் பேசும் போது ஏற்படுகிறது. எதிர்முனையில் இருப்பவர் கூற வரும் கருத்தை கவனத்துடன் கேட்டறிவதற்கு விடியோ மீட்டிங் வழிவகை செய்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

சுயபார்வை நீக்கம்:

எதிர்முனையில் இருப்பவருடன் விடியோ மீட்டிங் மூலம் பேசும்போது நம்முடைய சுய பார்வையை அணைத்து வைக்க வேண்டும். அப்போதுதான் கவனச் சிதறல் ஏற்படாமல் அவர்கள் கூற வரும் கருத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

குறைந்த எண்ணிக்கையில் இ-மெயில்:

பயனுள்ள தகவல் பரிமாற்றத்திற்கு அதிக எண்ணிக்கையில் இ-மெயில் அனுப்பாமல் குறைவான இ-மெயில்களை மட்டுமே அனுப்ப வேண்டும். நாம் அனுப்பும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்குமா, அதை அவர்கள் படித்துப் பார்ப்பார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பயனில்லாத தகவல்களை அவர்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை.

தேவையில்லாத இ-மெயில் அனுப்புவதால் மன அழுத்தம் ஏற்படும். உற்பத்தி பாதிப்புக்கு வழிவகுக்கும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் ஒரு நிறுவனத்தின் தகவல் பரிமாற்றத்தைப் பயனுள்ளதாக மேம்படுத்தலாம்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT