இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

10th Nov 2020 06:00 AM

ADVERTISEMENT

 

முக நூலிலிருந்து....


வாழ்தலில் விரக்தியடையும் போது... 
ஒரு சிற்றெறும்பு பின்னால் பயணியுங்கள்... 
அது ஒரு சோற்றுப் பருக்கையின் மீதோ...
ஒரு துளி சர்க்கரையின் மீதோ...
முட்டி மோதி ஜெயிப்பதைப் பார்க்கலாம். 

பொள்ளாச்சி முருகானந்தம்

 

ADVERTISEMENT

இருட்டிலேயே  வாழ்வோருக்கு சிறு கீற்று மட்டுமே ஆசுவாசம்...
அதீத வெளிச்சம், கண்கூசும்.

நிறைமதி


வாசிக்கத் தொடங்கியதும் கடைசிப் பக்கத்தை திறந்து பார்க்க நினைப்பதே ஆகச் சிறந்த புத்தகத் துரோகம்...
வாழ்கை, காதல், நட்பு, யாவிலும். 

முகவரி தேடி


பணிவும்,  வெட்கமும் பாங்காய் வந்து ஒட்டிக் கொண்டது... 
வெள்ளை தேசத் தேவதைகளுக்கு அழகழகாய்!


இளவெயினி பாரதீ


சுட்டுரையிலிருந்து...


வெடிக்க இயலாத எரிமலைகளாயினும்...
உள்ளுக்குள் குமுறிக் கொண்டுதான் இருக்கும்.

மாஸ்டர் பீஸ்

 

பணம் தான் உலகம் என்று நினைக்கும் சிலரிடம் சொல்லுங்கள்....
பூமியைத் தவிர வேறு எங்கும் பணம் செல்லுபடியாகாது என்று.

செந்தமிழ்

 

வேறு வழியே இல்லாமல் வேறு ஒருவரிடம் ஒன்றை ஒப்படைப்பதற்குப் பெயரும் நம்பிக்கை தான்..

சிதறல்கள்

 

தாகத்தின் தவிப்பு எல்லாம் தண்ணீர் கிடைக்கும் வரைதான்!

கிறுக்கன்

 

வலைதளத்திலிருந்து...

ஊரடங்கு சமயத்தில் இந்திய சினிமாத்துறை சுமார் மூவாயிரம் கோடி இழப்பைச் சந்தித்திருக்கிறது என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில்தான் வீட்டிலிருந்தே சினிமா பார்க்கும் ஓடிடி கலாசாரம் பெருகும் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள். வெப்சீரிஸ், சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களோடு கூடிய வீடியோக்களை மக்கள் மிக மலிவான 
கட்டணத்தில் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன் என்று அவரவருக்கு வசதியான ஓர் அமைப்பின் துணை  கொண்டு,  அவரவர் விருப்பப்பட்ட நேரத்தில் பார்க்கக் கூடிய சுதந்திரத்தை ஸ்ட்ரீம் தளங்கள் மக்களுக்கு வழங்குகின்றன. பொழுதுபோக்குத் துறையில் இது குறிப்பிடத்தக்க புரட்சியாகக் கணிக்கப்படுகிறது. 

இன்று சினிமாவில் நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் பணம்தான் பட்ஜெட்டில் பிரதானம் என்பது எல்லாரும் அறிந்த விஷயம்தான். சினிமாக்களுக்கு செலவழிப்பதை போல இதுபோன்ற ஸ்ட்ரீமிங் கண்டென்டுகளை உருவாக்க பல கோடி ரூபாய்கள் அநாவசியச் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சினிமாவைப் போல பெரிய நட்சத்திரங்களின் பங்கேற்பு ஆன்லைனுக்குத் தேவையில்லை. வித்தியாசமான சிந்தனையோடு பொழுதுபோக்குக்கு ஏற்ற கருத்துகளுக்குதான் ஆன்லைன் பார்வையாளர்களிடம் வரவேற்பு கிடைக்கிறது. நட்சத்திர அம்சமெல்லாம் இரண்டாம் பட்சமே. 

இத்தகைய சூழலில் திறமைக்குதான் முன்னுரிமை. நல்ல கதை, திரைக்கதை எழுதத் தெரிந்த எழுத்தாளர்கள், யதார்த்தமாக நடிக்கும் நடிக நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஓடிடி தன்னுடைய கதவை அகலமாகத் திறந்து வைத்திருக்கிறது.

https://www.luckylookonline.com/

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT