இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 267

10th Nov 2020 06:00 AM | ஆர்.அபிலாஷ்

ADVERTISEMENT

 

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர்.

அப்போது ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி நினைக்க, ஆடு மேய்ப்பவர் ஆல் இன் ஆல் அழகுராஜாவும் அவரது ஆடான வள்ளியும் அங்கு வருகிறார்கள். அப்போது chew somebody over எனும் phrasal verb -ஐ விளக்கும்படி கணேஷ் மன்னர் வீரபரகேசரியை வேண்டுகிறான். அவர் என்ன சொல்கிறார் எனப் பார்க்கலாமா?

வீரபரகேசரி: ஒருவரை கடுமையாக விமர்சிப்பது chewing somebody over. என்னுடைய ஆட்சியில் அதிகாரிகள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் எனக்கு கடுங்கோபம் வரும். அப்போது I would chew them over the moment they report to me. அவர்கள் என் முன் வந்த உடனே கடுமையாகக் கண்டிப்பேன். 

ADVERTISEMENT

கணேஷ்: என்ன மாதிரியான தவறுகளுக்கு அப்படிச் செய்வீர்கள் மன்னர் மன்னா? 

வீரபரகேசரி: கடுமையான குற்றங்களுக்கு. அதாவது மரண தண்டனையை அளிக்கும் அளவுக்கு கொடுமையான குற்றங்களுக்கு. உதாரணமாக, உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு  நான் காலையில் குளிப்பதற்கான நீரைப் பதமாகக் கொதிக்க வைத்து, என் சோப்பு, ஷாம்பூ, டவலை எல்லாம் அதற்கு உரிய இடங்களில் வைக்கிற பொறுப்பு. பண்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் என் குளியலுக்கான நீரின் சூட்டை சோதித்துப் பார்த்து விட்டு அதில் ரோஜா இதழ்களைத் தூவுவார்கள். மனிதவளத்துறை அமைச்சக அதிகாரிகள் எனக்கு எண்ணெய் தேய்த்து விட்டு, சோப்பு போட்டு குளிப்பாட்டும் அழகியரை ஒவ்வொரு நாளுக்கும் புதிது புதிதாக தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிற பொறுப்பு. இதில் ஏதாவது பிழை நேர்ந்து விட்டால் நாட்டின் sovereigntyக்கே பேராபத்து வந்து விடுமல்லவா? அதனால் எனக்கு கடுங்கோபம் வந்து I shall chew them over. 
கணேஷ் (சிரிப்பை அடக்கிக் கொண்டு): மிகவும் சிறப்பு மன்னா. நடுவே ஏதோ சொன்னீங்களே...? 
வீரபரகேசரி: Sovereignty
கணேஷ்: ஆமா அதே தான் மன்னா, இந்த நாளிதழ்களில் அடிக்கடி இதைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். அது என்ன? 
வீரபரகேசரி: அது ஒரு மிக முக்கியமான சொல். அது என்னவென எங்களில் யாருக்கும் தெரியாது. நாங்கள் அதைப் பார்த்ததே இல்லை. ஆனால் எங்கள் புகழுக்கு ஏதாவது களங்கம் வந்தால் எதிரி நாடுகளின் மீது பழியைப் போட்டுவிடுவோம்.  அப்போது sovereignty on attack என பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுப்போம். 
கணேஷ்: ஆமா அதே தான். 
வீரபரகேசரி: தமிழில் இதை இறையாண்மை எனச் சொல்வோம்.   Sovereignty என்பதை நிர்வாகத்தின் பொருட்டு சட்டங்கள் இயற்றுவதற்கும் முடிவெடுப்பதற்கு ஒரு தேசம் கொண்டுள்ள முழுமுதல் அதிகாரம் என விளக்கலாம். The authority of a state to govern itself.  

கணேஷ்: ஒரு தேசம் தன்னையே ஆள்வதற்கான அதிகாரம். இது ரொம்ப குழப்பமாக இருக்கிறதே. ஒரு தேசம் தன்னையே எப்படி ஆள முடியும்? நான் இத்தேசத்தின் குடிமகன். என்னை ஆள்வது என் அமைச்சரோ, முதல்வரோ, பிரதமரோ அல்லவா? எனக்கு என்னை ஆள என்ன அதிகாரம் இருக்கிறது? 
வீரபரகேசரி: ஆமா, இது சற்று குழப்பமான ஒரு கருத்தியல் தான். நீ உன் ஆட்சியாளர்களை வாக்களித்து தேர்ந்தெடுப்பதன் மூலம் உன்னையே ஆள்கிறாய். குடியாட்சியில் அதிகாரம் அப்படித்தான். 
கணேஷ்: நான் தேர்ந்தெடுக்காதவர் என்னை ஆள வந்தால்? 
வீரபரகேசரி: நீ பெரும்பான்மையின் விருப்பத்துக்கு அடி
பணிந்து உன் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். குடியாட்சியில் இதை majoritarianism என்கிறார்கள். அதாவது a majority of the population is entitled to a certain degree of primacy in society and has the right to make decisions that may affect the society.   தமிழில் இதை பெரும்பான்மைவாதம் என சொல்வோம். 
ஜூலி: ஜெர்மனியில் அப்படித்தானே holocaust நடந்தது? 
வீரபரகேசரி: ஆம், பெரும்பான்மைவாதத்தின் ஒரு மோசமான பக்கம் அது.  
கணேஷ்: எனக்கு குரோம்காஸ்ட் தான் தெரியும். அதை வச்சு மொபைலில் தெரியறதை டிவியில் பார்க்கலாம். இதுவும் அதுமாதிரி ஒரு சமாச்சாரமா? 
ஜூலி: ரெண்டுக்கும் சம்பந்தமே இல்லை. இது ஒரு கொடூரமான வரலாற்று நிகழ்வு. நீ இதைப் பற்றி நிச்சயமா தெரிஞ்சுக்கணும்.

(இனியும் பேசுவோம்)
 

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT