இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

19th May 2020 05:41 PM

ADVERTISEMENT


முக நூலிலிருந்து....


சுருக்குப் பையின் தூர்வரை துளாவி எடுக்கும் 
அந்த ஒத்த ரூபாயையும் பேரன் பேத்திகளுக்கு
மிட்டாய் வாங்கக் கொடுத்து பெருமூச்சு விடும்
அந்த ஒத்த சந்தோசத்தை விடவா
இந்த எஞ்சியிருக்கும் உசுரு ஒசத்தியாகி விடப் போகிறது
இவர்களுக்கு... 

முத்துநகர் ஆ.சுந்தர்

 

ADVERTISEMENT

கூடை  நிறையப் பூக்களைக் கொண்டு வந்தாலும்
மூக்கிற்கு மேலே முகர்ந்து விட முடியாது.

நா.வே.அருள்

 

அதோ தெரியுது பாருங்க,
ஏழு மலை... ஏழு கடல்...
அதைத் தாண்டி தான்...... 
எட்டாவது மலை 
எட்டாவது கடல் இருக்கு... 
அங்கதான் கரோனாவுக்கு
மருந்து இருக்குனு 
நெனச்சவங்கள்லாம் 
கையத் தூக்குங்க.

யாழினி ஸ்ரீ


சுட்டுரையிலிருந்து...


"சாப்பிடறியா?' என்று கேட்கும் அன்பிடமிருந்து நாசூக்காகத் தப்பித்து விட முடிகிறது. 
"சாப்பிடு!' என்று கட்டளையிடும் அன்பிடம்தான் சிக்கிக் கொள்கிறோம்.

யாத்திரி

 

உழைப்பு ஒன்றைக்கொண்டு தான் முன்னேற்றம் எனும் கதவைத் திறக்க முடியும்.

அழகிய மலர்

 

நிலவைக் காட்டி குழந்தைக்கு ஊட்டப் படும் சோற்றில்... 
நிலவும் கொஞ்சம் பசியாறி இருக்கும். 

நிலா


வெற்றிடம் போலதான் வெறுமையும்.
அழுத்தம் வெற்றிடத்தை நிரப்ப வருவதுபோல் பல சிந்தனைகள் வெறுமையை நிரப்ப முயல்கின்றன. 

சின்னகொம்பன்


வலைதளத்திலிருந்து...


அடுத்த சில வருடங்களுக்கு நாம் எப்படி ஆடை உடுத்தப் போகிறோம் என்பதைக் கூட இந்த கரோனா முடிவு செய்யும் போலிருக்கிறது. 

பொதுவாகவே நவீன ஆடைகளை ஒவ்வொரு காலத்திற்கும், தட்பவெட்பத்திற்கும், ஏன் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், தங்களுடைய செல்வச் செழிப்பை வெளிப்படுத்தும்விதமாக மனிதன் பாவித்து வந்தான். இந்த தொழிலுக்குப் பின்னால் பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடு செய்யப் பட்டு இருக்கிறது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் இதன் முதலாளிகளாக உள்ளார்கள். 

மிக அதிக விலை கொடுத்து ஆடைகள் வாங்கியது இனி குறையலாம்.

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாகக் கருதப்படுகிற சைனாவில் புதிதாக கஸ்டமர்கள் அதிக பொருட்செலவில் நவநாகரீக ஆடைகளை வாங்க ஆரம்பிக்கவில்லை, அல்லது தயங்குகிறார்கள்... 

அத்தியாவசியத் தேவைக்கான ஆடைகளை மட்டுமே அவர்கள் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப்போக்கு உலகம் முழுவதும் குறைந்தது இரண்டு வருடங்களாவது தொடரும் என்று நம்பப்படுகிறது. 

பொதுமக்கள் இப்போது தேவைக்காக மட்டுமே (பணத்தின் அருமையையும் பார்த்து) ஆடைகள் வாங்கத் தயாராகிவிட்டார்கள் என்று பிரான்ஸ்ஸ்காமஸ்தன் என்கிற பிரெஞ்ச் டிசைனர் கூறுகிறார் 

வருங்காலங்களில் கஸ்டமர்கள் ஒரு தனித்தன்மையுடனும் நேர்த்தியாக தெரிவு செய்யப்பட்ட துணிவகைகளைக் கொண்டதும், நீடித்து உழைப்பதும் ஆன ஆடைகளை வாங்கத் தொடங்குவார்கள்.

இதனால் உலகப் புகழ்பெற்ற பெரிய பிராண்ட்  நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடும்.

மேக்சிமிலியானா நெகோலெல்லி (Maximiliano Nicolelli) என்கிற இத்தாலியை சேர்ந்த ஓர் ஆராய்ச்சி நிறுவனமும் வேறொரு கதை சொல்லுகிறது..

இனிமேல் பணப்புழக்கம் குறைவாக இருப்பதால் உபயோகிப்பாளர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் தகுந்த மாதிரி உடைகளை வாங்குவதைத் தவிர்த்து குறைந்தபட்சம் வருடத்திற்கு இரண்டுஅல்லது மூன்று முறை மட்டுமே ஆடைகளை வாங்குவார்கள்.

http://rpsubrabharathimanian.blogspot.com/

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT