இளைஞர்மணி

வாட்ஸ் ஆப்:

14th May 2020 05:47 PM | -அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிப்போய் உள்ள மக்களை சொந்தங்களுடனும், நண்பர்களுடனும், அலுவலகப் பணியாளர்களுடனும் இணையத்தில் நேருக்கு நேர் இணைத்து வருகிறது வீடியோ கால் சேவை. தற்போதைய கரோனா நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்க இந்த வீடியோ கால் தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பெரிதும் உதவியாக உள்ளது. இதனால், வீடியோ கால் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. 

ஒரே நேரத்தில் வீடியோ காலில் நான்கு பேர் பங்கேற்கும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் எட்டாக அதிகரித்துள்ளது. சொந்தபந்தங்கள், நண்பர்கள் ஆகியோருடன் பொழுதுபோக்காகப் பேசுவதற்காக வாட்ஸ் ஆப் வீடியோ கால் வசதி இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எட்டுப் பேரை இணைக்கும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் முதலில் "ஐஓஎஸ்' மூலம் இயங்கும் ஆப்பிள் போன்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அடுத்ததாக ஆன்ட்ராய்டு போன்களுக்கு வர உள்ளது. இதற்காக வாட்ஸ் ஆப்பை 2.20.50 எனும் புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் வாட்ஸ் ஆப்பில் உள்ள வீடியோ கால் பொத்தானை தட்டி மேலும் 7 பேரை சேர்த்து கொள்ள வேண்டும். இதில் இணையும் மற்ற 7 பேரும் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டியது அவசியம். 

பெரும்பாலான அரசு, தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுடன் உரையாட "ஜூம்' காணொலிக் காட்சி மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் ஒரே நேரத்தில் 100 பேரை இணைக்க முடியும். அடுத்தபடியாக "ஸ்கைப்' மற்றும் "ஃபேஸ்புக் நியூ மெசஞ்சர் ரூம்ஸ்' சேவைகள் மூலம் சுமார் 50 பேரைக் காணொலிக் காட்சியினால் இணைக்க முடியும். ஆப்பிள் செல்லிடப்பேசியில் உள்ள "ஃபேஸ் டைம் சப்போர்ட்'- இல் 32 பேரையும், கூகுள் டுவோவில் 12 பேரையும் இணைக்க முடியும். 

வீடியோ கால்களில் பன்படுத்தப்படும் தரவுகள் பாதுகாப்பானவை அல்ல என்று எச்சரிக்கப்படுவதால் இந்த சேவையைப் பயன்பாட்டுக்கு ஏற்ப பாதுகாப்புடன் பயன்படுத்துவதே சிறந்தது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT