முக நூலிலிருந்து....
ஒரு வண்ணத்துப் பூச்சி கொண்டு வருகிறது...
என் குழந்தைப் பருவத்தையும் குதூகலத்தையும்.
மலர்விழி சிவப்பிரகாசம்
இரண்டு விசயத்தை நன்றாகப் புரிந்து வைத்துக் கொள்ளுங்கள்...
கரோனாவுடன் போராட வேண்டும். பயப்படக் கூடாது.
மனைவியிடம் பயப்பட வேண்டும். போராடக் கூடாது.
புரிந்ததா?
இரண்டுக்கும் இன்னும் யாரும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.
கவனம்...
தமிழ் ஜோக்ஸ்
கடைசி நிறுத்தம் எதுவென்ற கவலையின்றி முத்தம் கொடுக்கிறது
முன்சீட்டு தகப்பன் தோளில் இருந்து...
பேருந்து குழந்தை.
நேச மித்ரன்
மனதை இறுக விடாமல் உழுது கொண்டேயிருக்கின்றன
மண்புழுக்களாய்...நினைவுகள்.
டிகே கலாப்ரியா
சுட்டுரையிலிருந்து...
கைதட்டல் வாங்குவதற்கு
சிங்கம் நடந்தாலே போதும்...
குரங்கு தான் குட்டிக்கரணம்
எல்லாம் போடணும்.
மெந்நிலா
லாக்டவுன்ல
சும்மா இருக்கதால
ரொம்ப யோசிச்சு யோசிச்சு
முன்ஜென்ம ஞாபகம்லாம்
வர ஆரம்பிச்சிருச்சு.
கரிகால் சோழன்
அழகா இருந்தா சந்தோசமா இருப்போமான்னு தெரியாது...
ஆனால்...
சந்தோசமா இருந்தா கண்டிப்பா அழகா இருப்போம்.
டிமிட்ரி இவ்நோஸ்கி
மண்ணாண்ட மன்னனும் ஒரு பிடி மண்ணாவது மண்ணுக்குள்...
விளையாட்டு முடிந்ததும் ராஜாவும் சிப்பாயும் ஒரே பெட்டிக்குள் சென்று விடுகிறார்கள்...
அவ்வளவுதான் வாழ்க்கை.
யமுனா கேசவன்
வலைதளத்திலிருந்து...
"இது சீனாவின் சதி... திட்டமிட்டு கரோனா நோயாளிகளை உலகம் முழுவதும் பரப்பியது...' என்பன போன்ற கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பலர் வெகுளித்தனமாக நினைப்பது போல, சீனாவில் இருப்பவர்கள் அனைவரும் சீனர்கள் அல்ல. சீனாவின் பல நகரங்களை, நியூயார்க், லண்டன், பாரிஸ் போன்ற மேற்கத்திய நகரங்களுடன் ஒப்பிடலாம். அதாவது பல்லின மக்கள் குடியேறியுள்ள பன்முகக் கலாசாரங்களை கொண்ட நகரங்கள்.
உலகில் முதன்முதலாக கரோனோ நோய்த் தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் வசித்து வந்தனர். அதற்குக் காரணம், அங்கு நிறைய பன்னாட்டுக் கம்பனிகள் தளம் அமைத்துள்ளன. அவற்றில் வேலை செய்ய வந்த பலர், வூஹானில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அவர்களில் பலர் தமது தாயகத்திற்கு திரும்பிச் சென்றிருப்பார்கள். அவர்களில் எத்தனை பேர் கரோனா வைரûஸக் காவிச் சென்றனர் என்பது தெரியாது.
அமெரிக்காவின் மக்டொனால்ட்ஸ், பெப்சி, ஜெர்மனியின் சீமன்ஸ், பிரான்சின் பேஜோ, சித்ரோயன், சுவீடனின் இகேயா போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் வூஹானில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டுமே சீனர்கள். நிர்வாக மட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பியர்கள். இந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் சீனர்களை அமர்த்துவதில்லை. அதற்குக் காரணம், அந்த நிறுவனங்களின் தொழிநுட்ப அறிவு ஓர் இராணுவ இரகசியம் போன்று பாதுகாக்கப் படுகின்றது.
http://kalaiy.blogspot.com/