இளைஞர்மணி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை!

17th Jun 2020 10:13 PM | -என். ஜே.

ADVERTISEMENT


மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 167 காலியிடங்களுக்கான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பதவி மற்றும் காலியிடங்கள்:

இன்ஜினியரிங்:

எலக்ட்ரானிக்ஸ் அண்ட்கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் -37
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் -35
கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் - 31
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் - 12
மெட்டீரியல் சயின்ஸ் & இன்ஜினியரிங்/ மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங் - 10
சிவில் இன்ஜினியரிங் -3
கெமிக்கல் இன்ஜினியரிங்-6
ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்-4

ADVERTISEMENT

பிற பிரிவுகள்:

உளவியல் -10
இயற்பியல் -8
வேதியியல் -7
கணிதம் -4

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி:

பொறியியல் பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். GATE - இல் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் பெற்றிருக்க வேண்டும்.

பிற பிரிவுகளில் பணியில் சேர சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்முறை: https://rac.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE மற்றும் NET தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு:

https://rac.gov.in/download/advt_137.pdf என்ற இணையதள அறிவிப்பைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.7.2020

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT