இளைஞர்மணி

சமூக இடைவெளி உணவகம்!

28th Jul 2020 06:00 AM | - என்.ஜே.

ADVERTISEMENT

 

கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க சமூக இடைவெளி அவசியம். உணவகங்களில் இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேட்பவர்களுக்கு, அது சாத்தியமே என்று பதில் அளிக்கிறார்கள் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள உணவகச் சொந்தக்காரர்கள்.

அங்கே உள்ள ஓர் உணவகத்தில் வட்டமான கூரையுள்ள மாடம் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்து சாப்பிடும் வசதியைச் செய்து தந்திருக்கிறார்கள். இதற்குள் குடும்பத்தினர், நண்பர்கள், தம்பதிகள் என வழக்கமான உணவகத்தைப் போலவே யார் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.இந்த உணவக இருக்கையில் அமர்ந்து கொண்டு தூரத்தில் தெரியும் கோல்டன் ஹார்ன் கழிமுகப் பகுதியை ரசித்துக் கொண்டே உண்ணலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT