இளைஞர்மணி

எல்லைகள் வேண்டும்!

14th Jan 2020 01:34 PM

ADVERTISEMENT

யாருக்கு என்ன தேவையோ, அந்தத் தேவைக்கு ஏற்றபடி அவர்களிடம் பேசுவதும், பழகுவதும், உதவி செய்வதும் மிகவும் முக்கியமான செயலாகும். எல்லாவற்றிற்கும் ஓர் எல்லையை வகுத்துக் கொண்டு அந்த எல்லைக்கு ஏற்றபடி பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது உயர்ந்த செயலாகும்.
 மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத கருத்துகளையும், தேவையற்ற விமர்சனங்களையும், பிறரிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அளவற்ற அவமானத்தை அள்ளிச் சுமக்கின்ற அவல நிலை கூட உருவாகிவிடும்.
 நாம் சொல்லுகின்ற கருத்தைப் புரிந்து கொள்பவர்களிடம் எளிதான முறையில் நமது எண்ணத்தை விளக்கிவிடலாம். ஆனால் நமது எண்ணத்தின் வண்ணத்தைச் சரியான அலை வரிசையில் கேட்க இயலாதவர்
 களிடம் திரும்பத் திரும்ப விளக்கங்கள் கொடுத்தாலும், அந்த விளக்கங்கள் அவர்களுக்குப் பயன்தரும் வகையில் அமையாது. மாறாக, எரிச்சலையும் கோபத்தையும் விரைவாக அவர்களுக்குக் கொண்டு வரும் கருவியாகவே அது மாறிவிடும்.
 பிறருக்குத் தேவை இல்லாத செய்திகளையும், தகவல்களையும் அவர்கள் ரசிப்பார்கள் என்று சற்று சிரமம் எடுத்து விளக்குவது அது நம்மை முட்டாளாக்கும் செயலாகவும் மாறிவிடுகிறது.
 தேவையான நேரத்தில், தேவையான தகவல்களை, தேவையானவர்களுக்கு, தேவையான இடத்தில் பகிர்ந்து கொள்வதே நல்ல செயலாக மாறும். அதுவே நமது வெற்றியின் ரகசியத்தை மற்றவர்களுக்குக் கூறும்.
 நெல்லை கவிநேசன் எழுதிய "வெற்றி பெறுவது எப்படி?' என்ற நூலிலிருந்து...

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT