இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

1st Dec 2020 06:00 AM

ADVERTISEMENT

 

முக நூலிலிருந்து....

கூடுகளைவீடுகளாக்கிக் கொள்கின்றன பறவைகள்...
வீடுகளைகூடுகளாக்கிக் கொள்கிறான்மனிதன்.

பொள்ளாச்சி முருகானந்தம்

 

ADVERTISEMENT

அவ்வளவு பாசத்தையும் மறக்கச் செய்து விடுகிறது கோபம்...
எவ்வளவு கோபத்தையும் மறக்கச் செய்து விடுகிறது பாசம்.

ஹேமவந்தனா

 

கரும் பரப்பில்வெள்ளையாய்ஒரு கறை...
நிலா.

நா.வே.அருள்

 

எவ்வளவு பெரிய வாழ்க்கையும்
ஒரு சிறிய மூச்சில்...அடங்கி விடுகிறது.

எடித் ரெனா

 

சுட்டுரையிலிருந்து...

நடந்தே வந்துவிட்டேன்...
கால் வலி இல்லை.
வரும் வழியில்லிப்ட் வேண்டிநீட்டிய கையில் மட்டும்...
கடுமையான வலி.

ரமேஷ் ஏழுமலை

 

எஃகை விட உறுதியானது "ஈகோ'...
எந்த உறவையும் உடைக்க வல்லது!

சவேதி


தன் கலரைமறைத்துக்கொள்ளமேலும்கலர் அடித்துக் கொள்கிறார்கள் மேக்கப்என்ற பெயரில்

படிக்காதவன்


யாருடைய மனதையும்,யாராலும் எடை போட முடியாது.
அவரவர் மனதே அவரவர்கள் செய்யும்
நல்லது கெட்டதை வைத்து எடை போட்டுக் கொள்கிறது.
நல்லது செய்தால் மனது லேசாகி சொர்க்கமாக்கும்.
கெட்டது செய்தால் மனது பாரம் கூடி
வாழ்க்கையே சுமையாகி நரகமாகிவிடும்.


எமகாதகன்

 

வலைதளத்திலிருந்து...

சிங்கம் மற்றும் புலிகளின் குணாதிசய ஒப்பீடு (பல இணைய தளங்களில் சுட்டது)
சிங்கம் என்றும் தனியாக வேட்டைக்குப் போகாது, கூட்டமாகவே செல்லும்.
புலி தனியாகவே வேட்டைக்குச் செல்ல விரும்பும்.
சிங்க குட்டிக்கு மூத்த சிங்கம் ஏதாவது வேட்டையாடச் சொல்லிக் கொடுத்தால்தான் வேட்டையாடும்.
ஆனால் புலிக்குட்டியை சில நாட்களிலேயே மூத்த புலிகள் தனியாக விட்டுவிடும். வேட்டையாடும் இயல்பு புலிகளுக்கு இயல்பாகவே அமைந்தது.
ஆண் சிங்கம் சோம்பேறி. பெண் சிங்கம் வேட்டையாடும் உணவை ஆண் சிங்கம் உண்ணும்.
புலிகளில் புலிக்குட்டி, ஆண் புலி, பெண் புலி என அவற்றுக்கு ஏற்ற உணவை அவையே தேடி கொள்ளும்.
சிங்கங்கள் தனக்குள்ளே அடித்துக் கொண்டாலும், வேறு மிருகங்கள் வரும் போது ஒற்றுமையுடன் இருக்கும்.
புலிகள் ஒன்றாக இருக்க விரும்புவதில்லை.
தனிமையையே பெரும்பாலும் விரும்பும் சிங்கம் "இடம் சாரா உயிரினம்' என்று அழைக்கப்படும். பல இடங்களுக்குச் சென்று அதன் ஆட்சியைச் செலுத்தும்.
புலி "இடம் சார்ந்த உயிரினம்' என்று அழைக்கப்படும். தான் பிறந்த இடத்தை விட்டு வெகு தூரம் செல்ல விரும்பாது. மற்ற இடங்களில் ஆட்சி செலுத்தவும் விரும்பாது.
சிங்கங்கள் இறந்த உணவை நெடு நாட்கள் வைத்து உண்ணும் பழக்கம் உடையது. சிங்கத்திற்குப் பசிக்காவிட்டாலும் உணவை வேட்டையாடி சேமித்து வைத்துக் கொள்ளும்.
புலிகளுக்குப் பசிக்கும் போது மட்டுமே அவற்றுக்கு வேட்டையாடும் எண்ணம் வரும்.
http://tamilpadaipugal.blogspot.com/

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT