இளைஞர்மணி

கூட்ட நெரிசல்... கூகுள் மேப்பில்!

அ. சர்ஃப்ராஸ்

உலகம் முழுவதும் மனிதர்களைக் கண்டு மனிதர்களையே அஞ்ச வைக்கும் கரோனா தொற்று பூதத்தை தடுப்பூசி எனும் புட்டிக்குள் அடைக்க ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் இரவும் பகலுமாகப் போராடி வருகின்றனர்.
ஆனாலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும்  வெளியே நட
மாடும் மக்களை கரோனா தொற்று எளிதில் பற்றிக் கொள்கிறது. சிலரது அலட்சியமான செயல்பாட்டால் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.  
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகள் எவையென மக்களுக்கு எச்சரிக்கும் புதிய சேவையைத் தொடங்கி உள்ளது. 
தற்போது விடுமுறை நாள்கள் வர உள்ளதால், ஒருவர் புதிய இடத்துக்குச் செல்ல திட்டமிட்டால், அந்த இடத்தின் கடந்த ஒரு வாரகால கரோனா பாதிப்பின் 
நிலவரம், உள்ளூர் நிர்வாகம் அமல்
படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் பேருந்து, ரயில்களில் நிலவும் கூட்ட நெரிசலின் தற்போதைய நிலவரம், நடந்து சென்றால் சாலை சந்திப்புகளில் நிலவும் கூட்ட நெரிசல் குறித்தும் "கூகுள் மேப்'பில் எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.
இந்தத் தகவல்களை உலகம் முழுவதும் பயன்படுத்தும் கூகுள் பயன்பாட்டாளர்களே அவ்வப்போது தகவல் மேம்பாடு  செய்வார்கள் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
இதேபோல், உணவுப் பொருளை ஆன் லைனில் பதிவு செய்துவிட்டதும், அந்தப் பொருள் எங்கிருந்து, எப்போது கிளம்பியது என்பது முதல் எவ்வளவு நேரத்தில் எப்போது வந்து சேரும், எவ்வளவு பணம் அளிக்க வேண்டும் என்பன போன்ற  தகவல்களை இனி கூகுள் மேப்பிலேயே நொடிக்கு நொடி தெரிந்து கொள்ளும் சேவையையும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
மேலும், கார்களை ஓட்டுபவர்கள் தங்களுக்கு வரும் செல்லிடப்பேசி அழைப்புகள், குறுந்தகவல்களை ஒலி வடிவில் தெரிவித்து அதற்கு பதிலளிக்கும் புதிய சேவையான "கூகுள் அசிஸ்டன்ட் டிரைவிங் மோட்' என்ற புதிய சேவையையும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
கரோனா பரவல் தொடங்கியதில் இருந்து "கூகுள் மேப்'பில் சுமார் 250 புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT