இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 270

ஆர்.அபி​லாஷ்


ஊரடங்கு பிரகடனம்செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்கவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அப்போது ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி நினைக்க, ஆடுமேய்ப்பவர் ஆல் இன் ஆல் அழகுராஜா தனது ஆடான வள்ளியுடன் அங்கு வருகிறார்.
வீரபரகேசரியின் அமைச்சரவைக் கூட்டம் அவசரமாக நடக்கிறது.

வீரபரகேசரி: யோவ் உள்துறை!
உள்துறை அமைச்சர்: சக்கர்வர்த்தித் திருமகனே!
வீரபரகேசரி: அந்த கணக்குப்பிள்ளை எங்கேய்யா?
உள்துறை அமைச்சர்: நிதியமைச்சர் ப்ர்ர்வுக்குப் போயிருக்கிறார்.
வீரபரகேசரி: கணக்குப் போடவே தெரியாத அவனெல்லாம் ஒரு நிதியமைச்சர். இனி அவனது பட்டத்தை கணக்குப்பிள்ளைன்னே வச்சுக்கலாம். என்ன?
உள்துறை: சிறப்பு மன்னா. இதை அறிந்து கணக்குப்பிள்ளை அமைச்சர் நிச்சயம் மகிழ்வார்.
வீரபரகேசரி: நான் எதைச் சொன்னாலும் தலையாட்ட வேண்டியது, நிதிநிலை அறிக்கையைப் படிக்கச் சொன்னா,வீட்டுக்காரம்மா எழுதிக் கொடுத்த மளிகைச் சாமான் லிஸ்டைப் படிக்க வேண்டியது. அப்புறம் ஊடகங்கள் முன்னால் போய் உதார் வேறு. இனிமேல், அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் போது எல்லா டாய்லெட்டையும் பூட்டுப் போடச் சொல்லுய்யா.
நிதியமைச்சர் சட்டையில் கையைத் துடைத்துக்கொண்டு ஓடி வருகிறார்.
வீரபரகேசரி: யோவ் நில்லு. இப்போ டைம் என்ன?
நிதியமைச்சர்: (கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார்) 9 ஆக ஒரு வினாடி. கரெக்டா 9 மணி. நான் தான் கரெக்டான டைமுக்கு வந்திருக்கேன். மத்தவங்க எனக்கு முன்னாடியே தப்பா வந்திட்டாங்க. I thought I would be on time today, yes I am on the dot, My prediction turned to be right. On the nose I am. 

வீரபரகேசரி: யோவ், டைம் ஒன்பதே கால். கடிகாரம் பார்க்கவும் தெரியாதா? 
நிதியமைச்சர் தலையை சொறிகிறார். 
கணேஷ் ஜூலியிடம்: என்ன ஜூலி, இந்தாளு இப்படி ர்ய் ற்ட்ங், ர்ய் ற்ட்ங் என அடுக்கிக் கொண்டே போகிறார். என்ன மேட்டர்? 

ஜூலி: On the dot என்றால் ல்ன்ய்ஸ்ரீற்ன்ஹப் ஆக இருப்பது. ஆனால் சொன்ன நேரத்தில் ஓர் இடத்திற்குப் போய் சேர்வது. On time உம் அப்படித்தான். He told us he would reach home at 9 am and he was on time. அதே போலத்தான், he arrived on the dot for the meeting. ஆனால் இந்த on the nose என்பதும் இதே பொருள் கொண்ட ஒரு phrasal verb. Precisely. On time என இதற்குப் பொருளுண்டு. We will start the meeting at the 9 am tomorrow, on the nose.  அதாவது மூக்கின் மீது கூட்டத்தை நடத்துவோம் என்றல்ல. மாறாக மிகச்சரியாக 9 மணிக்குக் கூட்டத்தை ஆரம்பிப்போம் என்று பொருள். புரிகிறதா? 
கணேஷ்: புரியுது. ஆனால் ஏன் மூக்கு? விசித்திரமா இருக்குது. 
ஜூலி: அதுக்குப் பின்னாடி ஒரு சுவாரஸ்யமான கதை இருக்குது. வானொலி ஒலிபரப்பு சேவை தொடங்கிய காலத்தில் ஸ்டுடியோவில் இஞ்சினியர் என்ன பண்ணுவார் என்றால் அறிவிப்பாளரை நோக்கி தன் மூக்கில் விரலை வைப்பாராம். அப்படி எனில் நேரமாகி விட்டது, தொடங்கு எனப் பொருள். அறிவிப்பாளர் உடனே கரெக்டான நேரத்தில் நிகழ்ச்சியை அறிவிப்பார். இப்படித்தான் on the nose எனும் phrasal verb புழக்கத்தில் வந்தது என்கிறார்கள். 
நிதியமைச்சர்: சுவாரஸ்யமான பின்னணிக் கதை. 
ஜூலி: அமைச்சரே, இந்த நாட்டோட இன்றைய ஜிடிபி என்னென்னு தெரியுமா? 
நிதியமைச்சர்: ஓ தெரியுமே. 8. ... ஆங் 8.5. ஆமா.
ஜூலி: அமைச்சரே அதெல்லாம் பல வருசங்களுக்கு முன்னாடி. இப்போ அது நான்கை கடந்து அதல பாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. Right under your nose. ஆனால் உங்களுக்கே தெரியல.
நிதியமைச்சரின் முகம் சுருங்குகிறது. 
ஜூலி: ஆனா நான் இதை right under the nose எனும் idiomatic expressionஇன் பொருளை விளக்குவதற்காகத் தான் சொன்னேன். உங்களைப் பழிக்க அல்ல. நீங்க ஒரு சிறந்த நிதியமைச்சர் என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை.
நிதியமைச்சரின் முகம் மலர்கிறது: மிக்க நன்றி.
வீரபரகேசரி: தத்தி. கலாய்ச்சாலும் புரிய மாட்டேங்குது.
கணேஷ்: எனக்கு ஒண்ணுமே புரியல. Right under the nose என்றால் என்ன?
ஜூலி: சொல்றேன். 
கணேஷ்: அப்புறம் அது ஏன் கழிப்பறையை ப்ர்ர் ன்னு ஏன் சொல்றாங்கன்னு விளக்கு. 
ஜூலி: ஓக்கே

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT