இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

7th Apr 2020 07:27 PM

ADVERTISEMENT


முக நூலிலிருந்து....

பாம்பு...
மிருகம்...
இப்பொழுது மனிதனைக் கண்டு மனிதன் பயப்படும் சூழல்.

சிபிச்செல்வன் முத்து


விதைத்தது ஓரிடம்...
விளைச்சல் உலகெங்கும்
அறுவடையாக வலிகள்... 
கரோனா... 
நீ காலப் புத்தகத்தில் கொடிய கதாபாத்திரம்.

ADVERTISEMENT

 மணிமேகலை கைலைவாசன்


பூமியின் மீது 
மனிதர்கள் வரைந்த
எல்லைக் கோடுகளைப் பார்த்து...
ஏதோ சொல்கிறது
எல்லையற்ற வானம்!

ஆர்.பாலகிருஷ்ணன்

 

மேரி பிஸ்கட்ல 17 ஹோல்ஸ் இருக்கு.
மில்க் பிகீஸ்ல 45 கட்டம் இருக்கு...
இன்னும் 20 நாளில் நிறைய கண்டுபிடிக்கணும்.

பெ. கருணாகரன்

சுட்டுரையிலிருந்து...

நூலறுந்த சிறுவனின் பட்டம்...
முறிந்த கிளையில் சிக்கி 
மீண்டும் பறக்கிறது.

பழைய சோறு

 

நெஞ்சை நிமிர்த்தி...
நியாயம்  பேச 
தெரிந்தவர்களுக்கு,
ஏனோ தவறை உணர்ந்து
தலை குனியத் தெரிவதில்லை.

பனித்துளி


அழுகையை அடக்கி வச்சு
தனிமையில் அழுதா...
முதிர்ச்சின்னு சொல்லுவானுங்க.
சிரிப்ப அடக்கி வச்சு 
தனிமையில் சிரிச்சா... 
முத்திப் போச்சுன்னு சொல்லுவானுங்க
அவ்வளவு தான் உலகம் 

Mr.கட்டெறும்பு


சிதறி கிடக்கும் சந்தோசங்களைத் தேடி கொண்டிருக்கிறோம்...
பேராசை எனும் கண்ணாடி அணிந்து.

ராஸ்கல்


காலில் சுடப்பட்டவர்க்கு சொல்லக்கூடாத ஆறுதல்...
"நடந்ததை மறந்திடுங்க'
 
வெண்பா


வலைதளத்திலிருந்து...

கண்மூடி ஒரு தடவை உலகத்தை அகக் கண்ணால் பாருங்கள். அச்சம், அச்சம், அச்சம். சிந்தனையில் கரோனா தவிர எதைத்தான் கொண்டு வர முடிகின்றது?   
மருத்துவர்கள், தாதியர்கள், வயோதிகர்களைப் பராமரிப்பவர்கள் போன்றோரின் மனநிலைகளை மனதில் நிறுத்தும் போது,  இதுவரை மருத்துவர்கள் கடவுளைப் போன்றவர்கள் என்று கருதியிருந்த கருத்துக்கு நேரடிச் சாட்சிகளாக இவர்கள் அமைகின்றார்கள்.  
போருக்குப் போகின்ற போராளிகள்,  தாம் திரும்பி வருவோமோ என்ற சந்தேகத்துடனேயே போவார்கள். அதேபோல் இவர்களும் மருத்துவசாலைக்குள் போகின்ற நாம் திரும்ப சுகதேகிகளாக வருவோமோ என்று அறியாமலேயே செல்கின்றார்கள். திரும்பி வருகின்ற நாம் நோயாளிகளாகத் திரும்பிவந்து வீட்டில் உள்ளவர்களுக்கு நோயைக் கொடுத்துவிடுவோமோ என்று பெரும் அச்சத்துடனேயே காணப்படுகின்றார்கள். சொந்த வீட்டிலேயே குடும்பத்தாருடன் தொடர்பின்றி தனித்திருக்கின்றார்கள். தூக்கமின்றி மருந்துகளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களும், கைபிடித்து வயோதிகர்களைக் கழுவித் துப்பரவு செய்பவர்களும், இரவிரவாக விழித்திருந்து நோயாளிகள் படும் வேதனைகளைக் கண்ணுற்றுப் பராமரிப்பவர்களும் என தம்முடைய உயிரைத் துச்சமாக மதித்துப் பணிபுரிகின்றர்கள். 
உறவினர்கள் நோயால் வேதனைப்படுவதை அவர்கள் கூடவே இருந்து கவனிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலமையை நினைத்து வேதனைப்படும் உறவினர்கள் மனநிலையை நினைத்துப் பாருங்கள். இதைவிட,  நோயால் துன்பப்படுபவர்கள் வேதனையை ஒரு தடவை நினைத்துப் பாருங்கள். நோயின் ஆக்கிரமிப்புக் குறையும் காலத்தில் மனநோயாளர்களை கவனிக்கும் நிலை உலகமெங்கும் வரப் போகின்றது. 

http://www.gowsy.com/

ADVERTISEMENT
ADVERTISEMENT