இளைஞர்மணி

இரண்டிலும் பகிரலாம்!

1st Oct 2019 12:44 PM | - அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

உலகம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருவதற்கு ஏற்ப, வாட்ஸ் ஆப்பும் தனது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு புதிய சேவைகளை அவ்வப்போது அளித்துக் கொண்டே வருகிறது. ஃபேஸ் புக் (முகநூல்) நிறுவனத்தின் நான்கு சமூகவலைதள ஊடகங்களான வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர், ஃபேஸ் புக் ஆகிய  நான்கையும் ஒருங்கிணைக்கும் பணியில் அந்த நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன் முதல்கட்டமாக  வாட்ஸ் ஆப்-இல் ஒருவர் பதிவேற்றம் செய்யும் "ஸ்டேடஸ்ûஸ' அப்படியே ஃபேஸ் புக்கில் பகிர்ந்து விடலாம். இந்த புதிய சேவையை வாட்ஸ் ஆப் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ஒருவர் தனது வாட்ஸ் ஆப் -இல்  இருந்து பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை 24 மணி நேரத்தில் தானாக மறைந்துவிடும்.

இதற்காக வாட்ஸ் ஆப் ஸ்டேடஸில் கிளிக் செய்த பின்னர், அதன் வலது ஓரமாக இருக்கும் மூன்று புள்ளிகளில் "ஷேர் டூ ஃபேஸ் புக்' என்பதை கிளிக் செய்தவுடன் ஃபேஸ் புக் உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்கும். பின்னர் ஃபேஸ் புக்கிற்குள் சென்றவுடன் உங்கள் வாட்ஸ் ஆப்பின் ஸ்டேடஸ் பகிரப்படும். இதன் மூலம் ஒருவர் தனது ஸ்டேடஸ்ûஸ வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக் என தனித்தனியாகப் பதிவிட வேண்டிய அவசியமில்லை. 

ADVERTISEMENT

இதேபோன்று, கைவிரல் ரேகை மூலம் வாட்ஸ் ஆப்பிற்குள் நுழையும் புதிய சேவையையும் அந்த நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயன்பாட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் புதிய வசதியை அந்த நிறுவனம் அளித்துள்ளது. இதேபோன்று தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க, ஒரே தகவல் வாட்ஸ் ஆப்பில் பலமுறை பகிரப்பட்டிருந்தால், அந்தத் தகவலை மற்றொருவர் பகிரும்போது, "இந்தத் தகவல் பல முறை பகிரப்பட்டுள்ளது' என்ற எச்சரிக்கை தகவல் வெளியாகும்.

மேலும், ஒருவரின் வாட்ஸ் ஆப்பிற்கு வரும் பல ஒலிப்பதிவுகளை தொடர்ந்து கேட்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு ஒவ்வொரு ஒலிப்பதிவை ஒவ்வொரு முறையும் தனித்தனியாக பிளே செய்து கேட்க வேண்டியிருந்தது. இதுபோன்ற புதிய சேவைகளின் மூலம் பழைய பயன்பாட்டாளர்களை தக்க வைக்கவும், புதிய பயன்பாட்டாளர்களைக் கவர்ந்து இழுக்கவும் ஃபேஸ் புக் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT