22 செப்டம்பர் 2019

வேலை...வேலை...வேலை...

DIN | Published: 21st May 2019 11:54 AM

சிண்டிகேட் வங்கியில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 14
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Asst. Manager (Certified Ethical Hacker) JMGS-I - 02
2. Asst. Manager (Cyber Forensic Analyst) JMGS-I - 02
3. Asst. Manager (Application Security Tester) JMGS-I - 02
சம்பளம்: மாதம் ரூ. 23,700 - 42,020
4. Manager (Application/web security personnel) MMGS-II  - 02
5. Manager (Computer/Digital Forensic Specialist) MMGS-II  - 02
6. Manager (IT Security Specialist) MMGS-II  - 04
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
தகுதி: பொறியியல் துறையில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்ஃபர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், கணினி அறிவியல், ஐடி பிரிவுகளில் பிசிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 
வயதுவரம்பு: 20 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு. 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார். 
விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ஸ்கேன் செய்து horecruitments@syndicatebank.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.syndicatebank.in/RecruitmentFiles/Advertisement-LATERAL-RECRUITMENT-SPECIALIST-OFFICERS_FINAL_29_04_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.05.2019

தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியில் வேலை
மொத்த காலியிடங்கள்: 79
பணி: Assistant Manager in Grade `A’ (RDBS)
1. General - 41
2. Animal Husbandry / Dairy Technology - 05
3. Economics & Agricultural Economics - 07
4. Environment - 04
5. Food Processing -03
6. Forestry - 03
7. Finance -07
8. Land Development - Soil Science - 05
9. Plantation and Horticulture - 03
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், Forestry, Veterinary Sciences, Animal Husbandry, Dairy Technology, Economics, Agriculture Economics, Environmental Science, Environmental Engineering,  Food Processing, Food Technology, Agriculture / Agriculture (Soil Science/Agronomy) Horticulture போன்ற துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம், பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். 
வயதுவரம்பு: 01.05.2019 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு. 
சம்பளம்: மாதம் ரூ. 28150 - 55600 
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் தகவல் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். மற்ற அனைத்துப் பிரிவைச் சார்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.650 + தகவல் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.850 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.nabard.org/auth/writereaddata/
CareerNotices/0905192246Grade%20A-2019%20Advt.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.05.2019 

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை
மொத்த காலியிடங்கள்: 73
பணி: Manager (Finance & Accounts)
காலியிடங்கள்: 41
சம்பளம்: மாதம் ரூ.67,700- 2,08,700
பணி: Accounts Officer
காயிடங்கள்: 32
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: Commerce, Accounts பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது ICAI, ICWAI, MBA(Finance) பெற்று 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு, விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய Ajay Malik, DGM(HR & Admn) - IB, Plot No: G-5 & 6, Sector - 10, Dwarka, New Delhi -110 075.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.nhai.org/writereaddata/Portal/JobPost/1192/1_Details_Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 27.05.2019

தமிழக அரசில் வேலை
மொத்த காலியிடங்கள்: 26
பணி: Research Assistant in the Institute of Veterinary Preventive Medicine, Ranipet
சம்பளம்: மாதம் ரூ. 55,500 - ரூ. 1,75,700 
வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு. 
தகுதி: அறிவியல் துறையில் மைக்ரோ பயாலஜி, பேதாலஜி, அனிமல் பயோ டெக்னாலஜி விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150 தேர்வுக் கட்டணம் - ரூ. 200, இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/Notifications/2019_17_Notifyn_Research_Assistant.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.05.2019 
தொகுப்பு: இரா.வெங்கடேசன்


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி!
படிச்சுட்டா...பெரிய ஆளா?
வேலை...வேலை...வேலை...
சொற்கள்!
வருமானம் தரும் அழகுக்கலை படிப்புகள்!