கூடைப்பந்தாட்ட புகைப்பட போட்டி

பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டமைப்பில் (International Basketball Federation - FIBA ) உலகிலுள்ள 213 தேசியக் கூடைப்பந்தாட்ட சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன. 1932-ஆம் ஆண்டில் உருவாக்கப்பெற்ற
கூடைப்பந்தாட்ட புகைப்பட போட்டி

பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டமைப்பில் (International Basketball Federation - FIBA ) உலகிலுள்ள 213 தேசியக் கூடைப்பந்தாட்ட சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன. 1932-ஆம் ஆண்டில் உருவாக்கப்பெற்ற இந்தக் கூட்டமைப்பு 1950 ஆம் ஆண்டு முதல் உலகில் மிகப்பெரிய பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டப் போட்டியைச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறது.
இந்த அமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகக் கூடைப்பந்தாட்டம் தொடர்புடைய புகைப்படப் போட்டியினை நடத்தி வருகிறது. 2019-ஆம் ஆண்டுக்கான புகைப்படப் போட்டிக்கு "கூடைப்பந்தாட்டம், வாழ்க்கையில் மாற்றங்களை எப்படி ஏற்படுத்துகிறது?' எனும் தீம் -ஐ அளித்திருக்கிறது. 
இப்போட்டியில் பங்கேற்பவர்கள் இந்தப் போட்டிக்கான இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு, போட்டிக்கான கருத்துருவுடன் தொடர்புடைய புகைப்படங்களை, அதிகபட்சமாக மூன்று புகைப்படங்கள் வரை சமர்ப்பிக்கலாம். இப்போட்டியில் பங்கேற்க நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. 
இப்போட்டியில் பங்கேற்கும் புகைப்படங்களிலிருந்து பரிசுக்குரிய சிறந்த புகைப்படங்களை, இந்த அமைப்பு நியமித்திருக்கும் ஆறு பேர் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும். இப்போட்டியில் தேர்வு செய்யப்பெறும் புகைப்படங்களில் முதல் பரிசாக, 3000 CHF (ரூ.2,07,403), இரண்டாம் பரிசாக 2000 CHF (ரூ.1,38,268), மூன்றாம் பரிசாக 1000 CHF (ரூ.69.134) என்று சுவிட்சர்லாந்து பிராங்க் பண மதிப்பில் பரிசளிக்கப்படும். நான்கு முதல் பத்து வரையிலான பரிசாக பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டமைப்பின் தயாரிப்புகள் பரிசாக அளிக்கப்பட இருக்கின்றன. 
இப்போட்டிக்குப் பெறப்பட்ட படங்களில் பரிசுக்குரிய 10 படங்களுடன், கூடுதலாக 30 படங்கள் தேர்வு செய்யப்பெற்று இவ்வமைப்பின் தலைமையகத்தில் 15-6-2019 முதல் 30-10-2019 வரையில் காட்சிக்காக வைக்கப்படும். பின்னர் இந்த அமைப்பின் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்படும். 
புகைப்பட போட்டி பற்றி மேலும் தெரிந்து கொள்ள:
https://photocontest.fiba.basket
ball/en/ எனும் இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
புகைப்படங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 30-4-2019 
தகவல் உதவி: தேனி மு. சுப்பிரமணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com