வாங்க இங்கிலீஷ் பேசலாம் 197 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 197 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது சேஷாச்சலம் நார்சிசம் பற்றி பேசுகையில் நார்சிசஸ் எனும் கிரேக்க தொன்ம பாத்திரத்தின் கதையைக் கூறுகிறார். இதை அடுத்து ஒரு கேள்வி எழுகிறது. நார்சிசமும் self-centredness உம் ஒன்றா? Ego-centrism என்கிறார்களே, அது என்ன? அதுவும் நார்சிசமும் ஒன்றா? சேஷாச்சலம் என்ன கூறப் போகிறார் எனக் காண்போம்!
சேஷாச்சலம்: நல்ல கேள்வி. ஆனால் எனக்கு நாம சைக்காலஜி வகுப்பில் இருக்கிற மாதிரி ஃபீலிங் வருதே.
புரொபஸர்: தப்பில்ல சேஷு... மொழிங்கிறது வெறுமனே அன்றாடப் புழக்கத்தில் உள்ள பொதுச்சொற்களானது அல்ல; அது சும்மா is, was  அல்ல. அதையும் கடந்து பல்வேறு அறிவுத்துறைகளில் இருந்து சொற்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். நான் நேற்று சச்சின் டெண்டுல்கரின் பேட்டி ஒன்றைப் பார்த்தேன். Sub-conscious மனத்திடம் தன்னை ஒப்புக் கொடுக்கும் போதே தான் அபாரமாய் ஆடுவதாய் சொல்கிறார். அதென்ன சப்-கான்ஷியஸ்? அது எங்கிருந்து வருகிறது? உளவியலில் இருந்து. ஃபிராயிடில் இருந்து. அது இப்போது நம் பொதுப்புழக்கத்துக்கு வந்து, நாம் நமது மனம் பிரக்ஞையின் பிடியில் இருந்து விலகி, அனுபூதி நிலையில் இருக்கையில் செய்கிற விசயங்களுக்குப் பயன்படுத்துகிறோம். ஓர் அழகான வரியை எழுதும் போது, ஒரு நல்ல சொல்லை பேச்சில் பயன்படுத்தும்போது, அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை, அது தானே அடிமனத்தில் இருந்து எழுந்து வந்தது என சொல்வதற்கு, my subconscious took over at that moment எனச் சொல்கிறோம். நமது குறைகளைக் கடந்து அபாரமாய் வேகமாய் ஒரு செயலைச் செய்து முடிக்கும் I was in a tremendous flow that day, I could not repeat that after that என சொல்கிறோம். அதென்ன flow? அதுவும் உளவியலில் இருந்து தான் வருகிறது. Mihaly Csikszentmihalyi  என்னும் உளவியலாளர் தான் flow எனும் கோட்பாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அவரது பெயரை உச்சரிக்கும் போது மிஹாய் ஷிக்ùஸன்டிமிஹாய் எனச் சொல்ல வேண்டும். அவரது புத்தகங்கள் வழி அது இன்று பிரசித்தமாகி உலகம் முழுக்க பயன்படுத்துகிறார்கள். நாம் புதுப்புது துறைகளில் பிரசித்தமாக உள்ள சொற்களை அறிந்து நமது வார்த்தை வளத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். எந்த துறை வல்லுநரைச் சந்தித்தாலும் அவரிடம் இருந்து ஒரு புதுச் சொல்லை கற்றுக் கொள்ள வேண்டும் என நான் என் மாணவர்களுக்கு வலியுறுத்துவேன். 
நடாஷா: Yes, I used to read all these poppsychologists once. 
கணேஷ்: சார்... அதென்ன பாப்? பாப் மியூசிக்கா? 
புரொபஸர்: பாப் என்றால் பாப்புலர் என்பதற்கான சுருக்கம். பாப் சைக்காலாஜி என்றால் வெகுஜனத்துக்கான உளவியல் என அர்த்தம். Pop culture, pop art, pop music எல்லாம் இதில் இருந்து தான் வருகிறது. 
சேஷாச்சலம்: ஆனால் ஒண்ணுடா, துறை வல்லுநரைக் கேளு கேளுன்னுட்டு என்னை பேசவே விட மாட்றியே...
புரொபஸர்: சாரி டா. You go ahead. 
சேஷாச்சலம்: Ego-centrism என்றால் inability to differentiate between ego and other.
கணேஷ்: அதென்ன other? 
சேஷாச்சலம்: மற்றமை. கணேஷ் என்றால் யார்? கணேஷ் என்றால் அவன் நடாஷா அல்ல, அவன் புரொபஸர் அல்ல, அவன் சேஷாசலம் அல்ல, அவன் ஜுலி அல்ல... 
புரொபஸர்: அவன் கணேஷே அல்ல. 
சேஷாச்சலம்: யெஸ். அவன் கணேஷ் எனும் பெயரில் உள்ள இன்னொருவன் அல்ல. அவன் நேற்று இருந்த கணேஷ் அல்ல. அவன் இன்று ஒரு புதிய கணேஷ். அவன் இப்படி தன்னை தன் போன்றோரில் இருந்து மாறுபடுத்தியே தன்னை அறிகிறான். இது தான் other. கணேஷின் உலகில் அவனல்லாத எதுவும் எவருமே other.
கணேஷ்: ஓ...
சேஷாச்சலம்: ஆமாம், இப்போது நீ இவ்வாறு உன்னை மாறுபடுத்தி பார்க்கிறாய். ஆனால் அதே நேரம் மற்றவர்களும் நீ அல்ல என உனக்கு தெளிவு இருக்க வேண்டும். மற்றவர்கள் கணேஷ் அல்ல, நடாஷாவும் கணேஷ் அல்ல. நமது தேவைகள், நம்பிக்கைகள், புரிதல்கள், நிலைப்பாடுகள் வேறு வேறு. நீயும் அவர்களும் ஒரே போல உலகை காண முடியாது என அறிந்திருக்க வேண்டும். சிலருக்கு இந்த வித்தியாசம் புரியாது. உலகமே தம்மை போல யோசிக்கிறது, யோசித்தே ஆக வேண்டும் என நினைப்பார்கள். இதுவே ego-centrism. மேலும் விளக்குகிறேன். 
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com