25 ஆகஸ்ட் 2019

வேலை...வேலை...வேலை...  

DIN | Published: 18th June 2019 11:16 AM

துணை ராணுவப் படையில் வேலை
நிறுவனம்: Indo Tibetan Border Police
மொத்த காலியிடங்கள்: 121
பணி: Constable (GD)
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 21.06.2019 தேதியின்படி 18 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு. 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 
விளையாட்டு தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுகளில் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கு பெற்று பதக்கம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களை இணையதள அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மருத்துவப் பரிசோதனையில் முதல் முறை தேர்ச்சி பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி மீணடும் மருத்துவப் பரிசோதனைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக 15 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/4/26/ITBP-Recruitment-2019-121-Constable-GD-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.06.2019

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை
பணி: தோட்டக்காரர் (Gardener) 
காலியிடங்கள்: 24
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 30
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 + இதர சலுகைககள்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வுக் கட்டணம்: பிசி, எம்பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_86_2019eng.pdf மற்றும் https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_85_2019eng.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.06.2019

இந்திய புவியியல் ஆய்வுத்துறையில் ஓட்டுநர் வேலை 
பணி : ஓட்டுநர் 
காலியிடங்கள்: 37
வயது வரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200 
பணியிடம்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கோவா 
விண்ணப்பிக்கும் முறை: https://www.gsi.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
முகவரி: ADDITIONAL DIRECTOR GENERAL & HEAD OF DEPARTMENT, GEOLOGICAL SURVEY OF INDIA, SOUTHERN REGION, BANDLAGUDA, HYDERABAD - 500068. 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://drive.google.com/file/d/1z76Dt3LMQFtay1D8xoUHkbE2gKVqhPXH/view என்னும் லிங்க்கைக் கிளிக் செய்யவும். https://www.gsi.gov.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை மே 26 -ஆம் தேதிக்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.06.2019 

தொழிலாளர் புராவிடென்ட் ஃபண்ட் நிறுவனத்தில் வேலை
பணி: Assistant 
காலியிடங்கள்: 280
சம்பளம்: மாதம் ரூ.44,900
வயது வரம்பு: 25.6.2019 தேதியின்படி 20 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.epfindia.gov.in அல்லது https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf www.epfindia.gov.in என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.06.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மனங்கொத்தி மாணவர்கள்!
"மகிழ்ச்சி'க்காக ஒரு படிப்பு!
மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்!
தண்ணீரைத் தூய்மையாக்கும் கருவி!
இலவசமாகப் பாட நூல்கள்!