செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

திரைமறைவு அறிவியல்  

DIN | Published: 18th June 2019 11:20 AM

கல்லூரி படிப்பு முடித்த பிறகு, போட்டித் தேர்வு எழுத புறப்பட்ட பிறகு, கண்ணில் காதில் படுகின்ற விஷயங்களில் எல்லாம் பொது அறிவு பொதிந்து கிடப்பதும்... அது யு.பி.எஸ்.சி.தேர்வு எழுத பயன்படுவதும் கற்றுக் கொள்ளப்பட்டது. உதாரணமாக நாம் நாள்தோறும் பயன்படுத்தும் செல்லிட தொலைபேசியின் தொடுதிரை எப்படிச் செயல்படுகிறது என்று யோசிப்போமேயானால்... அது குறித்து இணையதளத்திலோ, நூலகத்திலோ தேடிச் சென்றால்... கிடைக்கும் அனுபவம் கூட சுவாரஸ்யமான சதுரகிரி மலையேற்றம் போலத்தான். பல திருப்பங்கள் வந்துபோகும்... யு.பி.எஸ்.சி. 2017 முதனிலைத் தேர்வு(A - SERIES) கேள்வி எண்- 74க்கு விடையும் கிடைக்கும். 
தொடுதிரை செல்லிடத் தொலை பேசிகள் நம் விரல் நுனியில் உள்ள மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. இவை "கெபாஸிடிவ்' தொடுதிரைகள் ஆகும். பலவகையான தொடுதிரைகள் இருக்கின்றன. இண்டியம்டின் ஆக்ஸைடு எனும் நிறமற்ற வேதிப் பொருள் கண்ணாடி மீது பூசப்பட்டுத்தான் தொடுதிரைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த விவரங்களை ஆர்கானிக்லைட் எமிட்டிங் டையோடுகள் (OLED) குறித்து படிக்கப் போகையிலல் எதேச்சையாகக் கிடைத்தவை ஆகும். இந்த OLED தான் UPSC இல் கேட்கப்பட்டுள்ளது. OLEDக்கள் நமது கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளை அவற்றின் தொப்பையைக் குறைத்து தொலைக்காட்சித் திரைகளாக மாற்றிவிட்டன. 
ஒல்லிபெல்லிகில்லிகளாக்கி' என்று கூறினால் மிகையாகாது. 
இரா.ஆனந்தகுமார் எழுதிய
"பொய்க் கடிகாரம்' என்ற நூலிலிருந்து...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காடுகளில் 11 ஆண்டுகள்...50 ஆயிரம் புகைப்படங்கள்!
கை அசைவால் இயங்கும் சக்கர நாற்காலி!
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 204 - ஆர்.அபிலாஷ்
விதி
அறிவால் உருவாகும் ஆரோக்கிய சமுதாயம்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)