22 செப்டம்பர் 2019

கூகுளின் புதிய சேவை!

By அ.சர்ஃப்ராஸ்| DIN | Published: 11th June 2019 01:50 PM

ரயில், பேருந்து போக்குவரத்தை மட்டும் நம்பியே பெரும்பாலானவர்கள் உள்ளனர். எந்த ஓர் இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூகுள் மேப்பையே அனைவரும் நாடுகின்றோம். இதன் மூலம் அந்த இடத்தை  சென்றடையும் நேரம், தூரம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு பயணத்தைத் தொடங்கலாம். ரயில், பேருந்து, கார், இருசக்கர வாகனம்,போக்குவரத்து நெரிசல் ஆகிய வற்றைப் பொறுத்தே இவற்றின் பயண போக்குவரத்து நேரம் மாறும். பலர் குறைவான பயண நேரப் போக்குவரத்தைத் தேர்வு செய்து பயணம் செய்வார்கள். இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து புதிய சேவையை உருவாக்கியுள்ளது. 

அதாவது,  போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து ஓர் இடத்துக்கு பேருந்து, ரயில், ஆட்டோ ரிக்ஷா ஆகியவற்றில் குறிப்பிட்ட இடங்களில் ஏறி, இறங்கி, சேர வேண்டிய இடத்துக்கு விரைந்து செல்வதற்கு வழிகாட்டுவதுதான் கூகுள் மேப்பின் புதிய சேவை.

இந்தியாவில் இந்த சேவையை கூகுள் நிறுவனம் முதல் முறையாகக் கொண்டு வந்துள்ளது. போக்குவரத்து நெரிசலின் உடனடி நிலையின் அடிப்படையில் இந்த போக்குவரத்து மாறுதல் சேவையை கூகுள் மேப் வழங்குகிறது. தில்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டும் முதல்கட்டமாக இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நகரங்களிலும் இந்த சேவை தொடங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், நீங்கள் நிற்கும் பேருந்து நிலையத்துக்கு அரசு போக்குவரத்து பேருந்துகள் எத்தனை மணி நேரம் தாமதமாக வருகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வசதியையும் கூகுள் மேப் அளிக்கிறது. தில்லி, பெங்களூரு, மும்பை,சென்னை, ஹைதராபாத், புணே, லக்னௌ, மைசூர், கோயம்புத்தூர், சூரத் ஆகிய நகரங்களில் இந்த சேவை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 80 லட்சம் பேர் பயணம் மேற்கொள்ளும் ரயில்களின் நேரம், அந்த ரயில் தற்போது நிற்கும் இடம், எவ்வளவு நேரம் தாமதம் ஆகியவற்றைக் கூகுள் மேப்பில் அந்த ரயிலின் புறப்படும் இடம், சேரும் இடம் ஆகியவற்றைப் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி!
படிச்சுட்டா...பெரிய ஆளா?
வேலை...வேலை...வேலை...
சொற்கள்!
வருமானம் தரும் அழகுக்கலை படிப்புகள்!