இளைஞர்மணி

ஒப்பீடு!

16th Jul 2019 12:06 PM

ADVERTISEMENT

'ஒப்பீடு உங்கள் மகிழ்ச்சியைத் திருடிவிடும்' என்று முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் சரியாகத்தான் கூறியுள்ளார். ஒப்பீடு நாம் எல்லாரும் அடிக்கடி செய்கின்ற ஒரு விஷயம்தான். நம்முடைய வாழ்க்கை முறையை நம்முடைய உடன்பிறந்தோரின் வாழ்க்கை முறையோடும், நம்முடைய குழந்தையை அவனுடைய வகுப்புத் தோழர்களுடனும், நம் குழந்தையின் பள்ளியை மற்ற பள்ளிகளோடும், நம் வாழ்க்கைத்துணைவரை நமக்குத் தெரிந்த இன்னொருவருடனும் நாம் ஒப்பிடுகிறோம். நமக்குக் கிடைத்திருப்பவை குறித்து மகிழ்ச்சி இல்லாமல் போவதால்தான் நாம் அவ்வாறு செய்கிறோம். நம்மிடம் இருப்பவற்றை மற்றவர்களிடம் இருப்பவற்றோடு நாம் தொடர்ந்து ஒப்பிட்டுக் கொண்டே இருந்தால், வாழ்வில் நமக்கு ஒருபோதும் மனநிறைவு உண்டாகாது. ஏதோ ஒன்று நம்மிடம் இல்லை என்ற உணர்வுதான் எல்லா நேரத்திலும் நம்முள் மேலோங்கி இருக்கும். நாம் இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்தால், இதைவிடச் சிறந்தது நமக்குக் கிடைத்திருக்கும் என்று சில சமயங்களில் நாம் நினைக்கக் கூடும். ஆனால் எதுவொன்றிலும் எவருக்கும் மிகச் சிறந்தது என்று எதுவும் அமைவதில்லை. ஏனெனில் ஒரு வேலையாக இருந்தாலும், சரி, ஒரு வீடாக இருந்தாலும் சரி அல்லது ஒரு வாழ்க்கைத்துணைவராக இருந்தாலும் சரி, நமக்கு வாய்த்திருப்பவற்றைவிடச் சிறந்த ஒன்று இவ்வுலகில் இருக்கத்தான் செய்யும். நம் வசம் இருப்பவற்றைக் கொண்டு நம்மால் இயன்ற அளவு சிறப்பாகச் செயல்படுவதுதான் மகிழ்ச்சிக்கான ரகசியமாகும்.
 நாகலட்சுமி சண்முகம் எழுதிய "மாயாஜாலமான மண வாழ்க்கை- மறந்துபோன ரகசியங்கள்' என்ற நூலிலிருந்து...

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT