இளைஞர்மணி

சரியான பார்வை...சரியான வழி...சரியான செயல்! 53- தா.நெடுஞ்செழியன்

2nd Jul 2019 11:19 AM

ADVERTISEMENT

நமது பூமியில் ஏறத்தாழ நிலத்தை விட 3 மடங்கு நீர் உள்ளது. இந்த நீர்வளம் பற்றி நாம் ஆழமாக எதையும் ஆராயவில்லை. ஒரு காலத்தில் தமிழகம் ஆழ்கடலில் சென்று முத்தெடுத்து அந்த முத்தினை உலகத்துக்கே கொண்டு போய் சேர்த்தது. தூத்துக்குடி இதற்கு புகழ்பெற்றது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அதே தூத்துக்குடியில் எவ்வளவு பேர் இப்போது முத்துக்குளிக்கும் தொழிலை நடத்துகிறார்கள் என்று பார்த்தோமானால் அது மிக மிகக் குறைவு. 
நீர் வளம் என்பது நீர் சார்ந்த உயிரினங்களையும் உள்ளடக்கியதே. அந்த உயிரினங்கள் எவ்வாறு தங்களது வாழ்க்கைமுறைகளைக் கையாள்கின்றன? என்பது நீர்வளத்துறை படிப்பின் ஒரு பகுதியாகும். நீர் வளத்தைச் சார்ந்து மனிதகுலத்தின் பெரும்பான்மையான மக்கள் உள்ளனர். இந்தியாவில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து உள்ளது. இங்குள்ள கடற்கரை அருகே வாழும் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் அப்பகுதியில் உள்ள கடலைச் சார்ந்தே உள்ளன. கடலில் உள்ள மீன்கள், பிற உயிரினங்களை வைத்து அவர்களின் அன்றாட வாழ்க்கைப் பயணம் நடக்கிறது. 
ஆனால் கடலைப் பற்றி உலகில் வாழும் மக்களில் 97 சதவீதம் பேர் அதிகம் அறியாதவர்களாகவே உள்ளனர். கடல்வாழ் உயிரினங்கள் அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன என்ற ஆராய்ச்சி மிகமிகக் குறைவாகவே உள்ளது. இந்தத் துறையில் படிப்பதற்கு என்று மேலை நாடுகளில் எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. நமது நாட்டில் அத்துறை சார்ந்த படிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் எஜுகேஷன் (Central 
Institute of Fisheries Education - CIFE) மீன்சார்ந்த அறிவியல் துறையில் உயர் கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 1961-ஆம் ஆண்டு மும்பை நகரில் இது அமைக்கப்பட்டது. இந்தக் கல்வி நிறுவனமானது இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் , இந்தியன் வெட்னரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (IVRI), நேஷனல் டயரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (NDRI), இன்டியன் அக்ரிகல்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆகிய 4 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இங்கு மாஸ்டர் ஆஃப் ஃபிஷரி சயின்ஸ் (எம்எஃப்எஸ்சி) பிஎச்டி ஆகியபடிப்புகள் வழங்கப்படுகின்றன. 
மீன் அறிவியல் பற்றி 11 பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அவை: 
1.Fisheries Resource Management,  
2.Aquaculture, 3.Aquatic Animal Health,
4.Fish Nutrition & Feed Technology, 5.Fish Physiology & Biochemistry,  6.Post- Harvest Technology, 7.Fish Genetics and Breeding, 8.Fish Biotechnology, 9.Fisheries Extension, 10.Aquatic Environmental Management, 11.Fisheries Economics ஆகும். 
மேலும் இந்தத்துறைகளில் உயரிய ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடல் சார் சூழலின் பல்வேறு தன்மைகளைப் பற்றியும், பயோடைவர்சிடி அஸஸ்மென்ட் அண்ட் கன்சர்வேஷன் பற்றியும், கடல்சார் துறைகளில் நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி ஆகியவற்றைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும், நியூட்ராசெட்டிகல்ஸ் அண்ட் நியூட்ரிஜினோமிக்ஸ் பற்றியும், ஜெனடிக் இம்ப்ரூவ்மெண்ட் அண்ட் ஜினோமிக்ஸ் பற்றியும், வெப்பநிலை மாறுதல் கடல் சார்ந்த பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும், கடல் வாழ் உயிரினங்கள், விலங்குகள் அவற்றின் சுற்றுச்சூழல்கள் பற்றியும், கடல் உணவுகளின் தன்மைகளைப் பற்றியும், விளிம்பு நிலையில் உள்ள வேளாண் மக்களின் வாழ்க்கை மற்றும் உணவுப் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. 
இவர்கள் அளிக்கக் கூடிய Aquaculture, Fisheries Resources Management, Post-Harvest Technology, Fisheries Resources Management, Aquatic Environment  Management , Aquatic Animal Health, Fish Biochemistry & Physiology , Fish Nutrition & Feed Technology,  Fish Genetics & Breeding, Fish Biotechnology, Fisheries Extension, Fisheries Economics ஆகிய பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்பான M.F.Sc பட்டப் படிப்பை வழங்கி வருகிறது. இரண்டாண்டு ஃபிஷரிஸ் சயின்ஸ் பட்டயப்படிப்பையும் வழங்குகிறது. அக்வா கல்ச்சர், ஃபிஷரிஸ் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், போஸ்ட் ஹார்வஸ்ட் டெக்னாலஜி உள்ளிட்ட 11 ஆராய்ச்சிப் படிப்புகளையும் வழங்கி வருகிறது. 
வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் கடல்சார் ஆராய்ச்சிகளில் உலக அளவில் எண்ணற்றதுறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மீன் வளம் மட்டுமல்லாது, கடலின் தன்மை, அங்கு நிலவும் மரைன் ஈகோ சிஸ்டம், மரைன் பயாலஜி இவற்றைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை மீனவர்கள் தமது பாரம்பரிய அனுபவப்பூர்வமான அறிவைப் பயன்படுத்தியே கடலுக்குள் சென்று மீன் பிடிக்கிறார்கள்.
இத்துறையில் இன்றைக்கு நடைபெறக்கூடிய பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை இணைத்து மீன் பிடிக்கும் பணியை உலக அளவில் மேம்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் நமது மீனவர்களுக்கு இத்துறையின் இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்கள் தெரிவிக்கப்படவில்லை. அவற்றை நாம் நடைமுறைக்குக் கொண்டு வரவுமில்லை. உதாரணமாக, எந்தெந்த பகுதிகளில் என்னென்ன மீன்கள் கிடைக்கும்? மீன்கள் தட்பவெப்பச் சூழ்நிலைகளின் காரணமாக, வேறு பல காரணங்களினால் எவ்வாறு இடம் பெயர்கின்றன? எந்த எந்த இடங்களுக்குச் சென்றால்,எவ்வகையான மீன்கள் கிடைக்கும்? ஆகியவற்றைப் பற்றிய போதிய ஆராய்ச்சிகள் உலக அளவில் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றைப் பற்றிய கல்வி இங்கு வளர்த்தெடுக்கப்படவில்லை. 
மொத்த பரப்பில், நான்கில் மூன்று பங்கு நீர்வளம் இருந்தாலும், அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளை அதிகமாக நாம் செய்யவில்லை. அதற்கான முக்கியத்துவத்தை நாம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணர்த்தவில்லை. இன்றைக்கு வெளிநாடுகளில் மீனவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கடலுக்குள் சென்று நிறைய வருமானம் ஈட்டுகிறார்கள். 
பிற்காலச் சோழர்கள் கடல்கடந்து வாணிபம் செய்தனர். அவர்களுக்கு தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லையென்றாலும், இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதியை ஆட்சி செய்து வந்தார்கள். அவர்கள் கடல்கடந்து வாணிபம் செய்தபோது கடலின் பல்வேறு பருவகாலங்களில் ஏற்படும் அபாயங்களை உணர்ந்து, பயணம் செய்து அவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதியில் சோழ ஆட்சியை நிறுவினார்கள். அப்போது இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை. 
சாலைகளுக்கு எவ்வாறு வரைபடம் இருக்கிறதோ, அதைப்போல கடலுக்கும் எண்ணற்ற வரைபடங்கள் உள்ளன. 
இப்போது கடலில் ஒரு கப்பல் செல்லும்போது புயல் உருவானால், அந்தக் கப்பல் எவ்வாறு திசையை மாற்றி புயலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்பதற்கான வழிகாட்டலை நிலத்திலிருந்தே அளிக்கக் கூடிய வசதிகள் வந்துவிட்டன. அதைப் பற்றிய துறைதான் நாட்டிகல் சயின்ஸ் துறையாகும். 
பி.எஸ்சி நாட்டிகல் சயின்ஸ், டிப்ளமோ இன் நாட்டிகல் சயின்ஸ் படிப்புகள் உள்ளன. சுனாமி போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது அவற்றை தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியினால் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சிகளும் ஏராளமாக உள்ளன. ஆகவே நாட்டிகல் சயின்ஸ் படித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இதை நாம் நமது மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுவதில்லை.
நம் தமிழகத்தில் ஃபிசரிஸ் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் தூத்துக்குடியில் உள்ளது. 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வாயிலாக தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் ஏறத்தாழ 60 மாணவர்கள் ஃபிசரிஸ் சயின்ஸில் இளநிலைப் பட்டப் படிப்பு (Bachelor in Fisheries Science)பயின்று வருகிறார்கள். இது நான்காண்டுகள் பயிலும் இளநிலைப் பட்டப்படிப்பாகும். 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT