ஸ்மார்ட் காலணி!

மனிதர்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பொருள்கள் "ஸ்மார்ட்'ஆக மாறி வருகின்றன. இந்த தொழில்நுட்பம், காலணிகளில் (ஷூ) புகுத்தப்பட்டு ஸ்மார்ட் ஷூக்கள் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் காலணி!

மனிதர்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பொருள்கள் "ஸ்மார்ட்'ஆக மாறி வருகின்றன. இந்த தொழில்நுட்பம், காலணிகளில் (ஷூ) புகுத்தப்பட்டு ஸ்மார்ட் ஷூக்கள் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக கூடைப்பந்து வீரர்களுக்கு இந்த ஸ்மார்ட் காலணிகளை நைக் நிறுவனம் தயாரித்துள்ளது. பொதுவாக, நாம் ஷூக்களை அணிய, அதில் உள்ள கயிறுகளை (லேஸை) இறுக்கமாக கட்டிக் கொள்வோம். ஆனால், இந்த ஸ்மார்ட் ஷூக்களில் நமது கால்களை உள்ளே நுழைத்தால் மட்டும் போதும். நமது கால்களின் மேற்பகுதியின் அளவுக்கு ஏற்ப, ஷூ இறுகிக் கொள்ளும்.

இதனை ஸ்மார்ட் ஷூக்களின் கீழ் உள்ள பொத்தான்களின் மூலம் நாம் தேவையான இறுக்கத்தைச் செய்து கொள்ளலாம், அல்லது நமது ஸ்மார்ட் போனில் உள்ள செயலி (ஆப்) மூலமும் இயக்கலாம்.

இதற்காக ஸ்மார்ட் ஷூவில் சிறிய அளவு மோட்டார்களும், சென்சார்களுடன் கூடிய கியர்களும் பொருத்தப்பட்டுள்ளன. நாம் ஸ்மார்ட் போன்களை மின்சாரத்தில் சார்ஜ் செய்து பயன்படுத்துவதைப்போல், இந்த ஸ்மார்ட் ஷூக்களையும் ஒயர்லஸ் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்து பயன்படுத்தலாம். தொடர்ந்து மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.

கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள், வார்ம் அப் விளையாட்டு போட்டி, கடுமையான விளையாட்டு போட்டி என போட்டிகளுக்கு ஏற்ப அவ்வப்போது மாறி மாறி ஷூ லேஸ்களை இறுக்கி பயன்படுத்துவார்கள். இந்த ஸ்மார்ட் ஷூக்களும் போட்டிகளுக்கு ஏற்ப கால்களை இறுக்கிக் கொள்ளும். கூடைப்பந்து விளையாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஷூக்கள் விரைவில் அனைத்து தரப்பினருக்கும் உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com