இலவசமாகப் பாட நூல்கள்!

இணையத்தில் நூல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியுடன் பல இணைய நூலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இலவசமாகப் பாட நூல்கள்!

இணையத்தில் நூல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியுடன் பல இணைய நூலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில நூலகங்கள் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொண்ட பின்பு, அங்குள்ள நூல்களைப் படிக்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அனுமதிக்கின்றன. சில நூலகங்கள் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கின்றன. 
இது போன்ற இணைய நூலகங்களுள் பாட நூல்களை மட்டும் இலவசமாகத் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், வணிக அடிப்படையிலான நூல்களைக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து பயன்படுத்திக் கொள்ளவும் உதவும் ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 
இந்த இணையதளத்தில் பாட நூல்கள் (Text Books) எனும் தலைப்பின் கீழாகக் கணக்குப் பதிவு (Accounting), தொழில் வாழ்க்கை மற்றும் படிப்புகளுக்கான ஆலோசனை (Career & Study Advice), பொருளியல் மற்றும் நிதி (Economics & Finance), பொறியியல் (Engineering), தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயல் திட்டமிடல் (IT & 
Programming), மொழிகள் (Languages), சந்தைப்படுத்தல் மற்றும் சட்டம் (Marketing & Law), இயற்கை அறிவியல் (Natural Science), புள்ளியியல் மற்றும் கணிதவியல் (Statistics & Mathematics), உத்திகள் மற்றும் மேலாண்மை (Strategy & Management) எனும் முதன்மைத் தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. 
மேற்காணும் ஒவ்வொரு தலைப்பிலும் சொடுக்கினால், அந்தத் தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு துணைத் தலைப்புகள் கிடைக்கின்றன. தேவையான துணைத் தலைப்புகளில் சொடுக்கி, அங்கு இடம் பெற்றிருக்கும் நூல்களை, இத்தளத்தில் தரப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இதே போன்று வணிகம் (Business) எனும் தலைப்பின் கீழாக Accounting & Finance,  Career Management, Communication & Presentation, Engineering, Entrepreneurship, IT Management ,
Job Search & CV,  Management & Strategy, Marketing & Sales, Office Programmes & 
Softwares, Personal Development எனும் முதன்மைத் தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. 
மேற்காணும் ஒவ்வொரு தலைப்பிலும் சொடுக்கினால், அந்தத் தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு துணைத் தலைப்புகள் பார்வைக்குக் கிடைக்கின்றன. இங்குள்ள நூல்களை இத்தளம் குறிப்பிடும் கட்டணத்தைச் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொண்டு, பின்னர் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 
பல்வேறு அரிய நூல்களைக் கொண்டிருக்கும் இந்த இணையதளத்தினைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் https://bookboon.com/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.
- மு. சுப்பிரமணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com