விதி

என்னுடைய வாழ்க்கையிலேயே பல கட்டங்களில் விதி என்று நியாயப்படுத்தப்பட்டவற்றை என் முயற்சியின் மூலம் நான் தாண்டி வந்திருக்கிறேன். சார்பாக நடந்தால் திறமை என்றும்,
விதி

என்னுடைய வாழ்க்கையிலேயே பல கட்டங்களில் விதி என்று நியாயப்படுத்தப்பட்டவற்றை என் முயற்சியின் மூலம் நான் தாண்டி வந்திருக்கிறேன். சார்பாக நடந்தால் திறமை என்றும், எதிராக நடந்தால் விதி என்றும் நாம் சமாதானப்படுத்திக் கொள்கிறோம். மாயை என்கிற சொல் இல்லாதது என்கிற பொருளில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை. மாறிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் குறியீடு. "நெருநல் உளனொருவன் இன்றில்லை' என்கின்ற திருக்குறளுக்குக் கூட, நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று பொருள் கொள்ளாமல் நேற்று இருந்த மாதிரி அவன் இல்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நேற்று அவன் ஒரு கல்லாக இருந்திருக்கலாம். இன்று சிற்பமாகி இருக்கலாம். நேற்று முள்ளாக இருந்திருக்கலாம். இன்று மலராக இருக்கலாம். நேற்று பெண்ணாக இருந்திருக்கலாம். இன்று தாயாகி இருக்கலாம். ஒரு நிமிடத்திற்கு முன் இருந்த உலகம் இப்போது இல்லை. பல மாற்றங்களை அது அடைந்திருக்கிறது. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு பயணத்தைத் தொடர வேண்டுமே தவிர, அதனால் எல்லாம் வீண் என்று சொல்லிச் சுழலுகிற பூமியை நிறுத்திவிட்டு இறங்க முற்படுகிறது அறிவுடைமையாகாது.
 எங்கெங்கெல்லாம் விதிகள் மக்களின் தலைவிதி என்று சொல்லப்படுபவற்றை நியாயப்படுத்துகின்றனவோ அவற்றை அனைவரின் ஒத்துழைப்போடு உடைத்து எறிய வேண்டும். எந்த விதி உடைக்கப்பட வேண்டும் என்பதும், எந்தவிதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் அவற்றின் தன்மையால் தீர்மானிக்கப்படுகின்றது.
 சுப்ரபாரதி மணியன் தொகுத்த "இறையன்பு வாசக அனுபவம்'
 என்ற நூலிலிருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com