வெற்றிக்குத் தேவை... தரம்!

இருப்பதோ ஒரு வீடு; அதையும் விற்று தொழில் தொடங்கி நஷ்டமாகி விட்டால் என்ன செய்வது என்று எடுத்தவுடனே, நெகட்டிவ்வாக யோசித்து தொழில் தொடங்க தயங்குபவர்கள் மத்தியில், தனது சிறிய வீட்டை அடமானம் வைத்து
வெற்றிக்குத் தேவை... தரம்!

இருப்பதோ ஒரு வீடு; அதையும் விற்று தொழில் தொடங்கி நஷ்டமாகி விட்டால் என்ன செய்வது என்று எடுத்தவுடனே, நெகட்டிவ்வாக யோசித்து தொழில் தொடங்க தயங்குபவர்கள் மத்தியில், தனது சிறிய வீட்டை அடமானம் வைத்து, அதன் மூலம் சிறிய அளவில் தொழிலைத் தொடங்கி தங்களது, முயற்சியாலும், உழைப்பாலும் சாதனை படைத்து வருகின்றனர் சகோதரர்கள். 

இந்தூரைச் சேர்ந்த ரஜத்ஜெயின் மற்றும் மோஹித் தான் அந்த சாதனைக்கு சொந்தக்கார சகோதரர்கள்.  ஆடம்பர ஹோட்டல்களுக்கான பல்வேறு விருத்தோம்பல் பொருள்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனமாக தங்களது நிறுவனத்தை அவர்கள் உயர்த்தியுள்ளனர்.

"" நாங்கள் ஒரு முறை ஹோட்டலில் தங்கியிருந்த பொழுது, ஹோட்டல் நிர்வாகம் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்ட சிறிய அளவிலான குளியலறைப் பொருட்கள் நினைவுக்கு வந்தன. பெரும்பாலும், பெரிய ஹோட்டல்களில் சாம்பிள் சோப், சாம்பிள் பவுடர், சாம்பிள் எண்ணெய் போன்றவை வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. 

இருந்தாலும், பல ஹோட்டல்களில் தரமான குளியலறைப் பொருள்கள் சரியாக கிடைக்காத நிலை இருந்து வருகிறது. மேலும் பல ஹோட்டல்கள் இவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருவதும் நடந்து வருகிறது. அது அவர்களுக்குப் பிரச்னையாகவும் இருந்தது.   எனவே, தரமான குளியலறைப் பொருள்களை நாம் தயார் செய்து வழங்கினால் மிகபெரிய வரவேற்பு கிடைக்கும் என நம்பினோம். 

இந்த நம்பிக்கையை வைத்து மட்டும் என்ன செய்ய முடியும்? பணம் பெரும் சவாலாக இருந்தது எங்களுக்கு. மார்க்கெட்டிங்  செய்வதற்கு மிகப்பெரிய தொகை செலவிடப்பட வேண்டிய நிலை இருக்கிறது. 

இதையெல்லாம் யோசித்து வங்கியில் கடன் கேட்டு அணுகினோம். ஆனால் கிடைக்கவில்லை.  இதையடுத்து, வீட்டை அடமானம் வைத்து வங்கிகளில் கடன் வாங்கினோம். தொடக்கத்தில் ஏழு ஊழியர்களுடன் நிறுவனத்தை தொடங்கினோம்'' என்கின்றனர் சாதனை சகோதரர்கள்.  

நெட்வொர்க்கிங் மற்றும் மார்கெட்டிங் செயல்பாடுகளுக்காக மோஹித் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் பல நாள்கள் அலைக்கழிப்புக்கு பின்னர் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பேசி ஆர்டர்களைப் பெற்றார். புதுப்புது  ஆராய்ச்சியில் ஈடுபட்டு பதிய முறைகள் மூலம் குளியலறைப் பொருள்களை உருவாக்கும் பணியில் ரஜத்ஈடுபட்டார். 

சகோதரர்களின் தொடர் முயற்சியின் பலனாக பல ஹோட்டல்கள் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கின. இதனால், வெறும் 100 சதுர அடியில் ஆரம்பிக்கப்பட்ட ஓண்ம்ண்ழ்ண்ஸ்ரீஹ ஏன்ய்ற்ங்ழ் நிறுவனம் படிப்படியாக முன்னேறி 70,000 சதுர அடி கொண்ட அலுவலமாக உயர்ந்தது. இப்போது, சகோதர்கள் வெறும் 7 பேருக்கு மட்டுமல்ல 400 ஊழியர்களுக்கு முதலாளியாக உயர்ந்துள்ளனர். 

""ஹோட்டல்கள் வழங்கிய ஆர்டர்களை குறித்த நேரத்தில் வழங்குவதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்'' என்று கூறும் சகோதரர்கள்,  ""ஆன்-லைன் மூலம் ஆர்டர் செய்யலாம். மேலும், உலகம் முழுவதுமுள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருள்கள் சரியான நேரத்தில் சென்றடைகிறதா? என்பதை நேரலையாக பார்க்கும் வசதி எங்களிடமும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் உண்டு. ஒரே கிளிக்கில் அதை செய்ய முடியும்.

உடலுக்குக் கெடுதி தராத நாங்கள் தயாரித்து வழங்கும் குளியலறைப் பொருள்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தன. மேலும், மக்கும் பொருள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீப்பு, பிரஷ் போன்றவையும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

ஒரே மாதிரியான தயாரிப்புகள் இல்லாமல், புதுமையும், படைப்பாற்றலும் கொண்டு புதிய உத்திகளைப் பயன்படுத்தி தரமான பொருள்களை தயாரித்து வழங்கினால் நிச்சயம் வெற்றியை தக்க வைக்க முடியும்'' என்கின்றனர் சகோதரர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com