இணைய வெளியினிலே...

உங்களை நம்புங்கள்... உங்களால் ஒரு சூரிய அஸ்தமனத்தை புதிய விடியலாக மாற்ற முடியும்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

உங்களை நம்புங்கள்... 
உங்களால் ஒரு சூரிய அஸ்தமனத்தை புதிய விடியலாக மாற்ற முடியும்.

சுந்தரபுத்தன்


பொறுமை கேவலமாகும் போதும், அன்பு அசிங்கப்படுத்தபடும் போதும், அமைதி காப்பது...
தூக்கி வீசத் தெரியாமல் அல்ல...
உணரும்போது அவர்களுக்கு வலிக்கக் கூடாது என்பதற்காக.

நட்பென்றால் நாம் என்போம்


இன்பமோ, துன்பமோ மகிழ்ச்சியோ, சோகமோ எப்போதும்... 
நினைவுகளால் நிரம்பி வழியும் மனமொரு அதிசயமே!

கிரிதரன்


கோபத்தில் பொருட்களை வீசியெறிய எல்லாராலும் முடியும்.
ஆனால்...கோபத்தையே வீசியெறிய சிலரால்மட்டும் தான் முடியும் .

மு.ரா.சுந்தரமூர்த்தி

நான் எந்த மனிதரையும் விட உயர்ந்தவனில்லை...
எந்த மனிதனையும் விட தாழ்ந்தவனுமில்லை.

செல்மா பிரியதர்ஷன்

சுட்டுரையிலிருந்து...

பொறுமை இழந்தவன் மிருகம் ஆகிறான், முட்டாளாகிறான், ஏமாளியாகிறான்...
பரவால்ல இருக்கட்டும். ஆனால் காதல்ல விழுந்தவன் பிணமாகிடுறானே...

குட்டி  தாதா 

உறவுகளை இடம் பெயர வைக்கும் நினைவுகளும்...
நினைவுகளை இடம் பெயர வைக்கும் உறவுகளும்...
வாழ்வின் அங்கங்களே!

ஆர்வக்கோளாறு

தூக்கி எறிந்தாலும்... 
தோற்றுப் போவதில்லை சிலர்.
சிரிப்போம் ஆரோக்கியமாய் வாழ்வோம். 


யாருக்கோ ரசிக்க தெரியவில்லை என்பதற்காக...
நிலவு  அதன் அழகை இழந்து விடுவதில்லை!

முகமூடி

வலைதளத்திலிருந்து...

எங்க ஊருக்கு பக்கம் தான் பாபநாசம், குற்றாலம் என்பதால் சில சமயம் குரங்குகள் கூட்டம் கூட்டமாய் தெருவில் வந்து எங்களுக்குப் போட்டியாக அட்டகாசம் செய்யும். தெருவில் ஒருத்தரையும் நடமாட விடாது. கையில் எதை வைத்திருந்தாலும் பிடுங்கிக் கொள்ளும். மொட்டை மாடியில் வத்தல் வடாம் காயப் போட்டிருந்தால் டேஸ்ட் பார்த்து உப்பு கூடக் குறைச்சல் சொல்லும். சில விவகாரமான குரங்குகள் சினிமா ஹீரோ மாதிரி பாத்ரூமிலிருந்து துண்டை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவிடும். அந்த வானரப் படையை எங்கள் வானரப் படையால் மட்டுமே சமாளிக்க முடியும் என்பதால், தெருவில் குரங்கு வந்தாச்சு என்றால் "ஏய் குரங்கு வந்தாச்சு... போங்கோடா போய் விரட்டுங்கோ...' என்று எங்களை கடமை அழைக்கும். கவுட்டைவில்லு என்றால் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. வ மாதிரி மரக் கொப்பை உடைத்து அதில் சைக்கிள் ட்யூப்பை கத்தரித்து கட்டி செய்யும் அத்தியாவசியமான ஆயுதம். அதில் குறி வைத்து அடிப்பதில் கிராமத்துப் பக்கம் கில்லாடிகளாய் இருப்பார்கள். அதைப் பார்த்தால் மட்டும் தான் குரங்குகள் ஒட்டம் எடுக்கும். ஆனால் இந்த ஆயுதம் இல்லாமலே எங்கள் வானரப்படை சத்தம் போட்டும் சிறிய கல்லை எறிந்தும், அந்த வானரப்படையை ஓட்டி விடும். (பெரிய கல்லை எறிந்து அந்த வீட்டு ஓட்டைப் பெயர்த்துவிட்டால் அந்த வீட்டில் வசிக்கும் பெரிய குரங்கு பிடித்துக் கொள்ளும். அதனால் தான் சிறிய கல்) ஆனால் என் நேரம் ஒரு நாள் இந்த ஆயுதம் எதுவும் இல்லாமல் நான் குரங்கை விரட்டப் புறப்பட்டேன். வழக்கம் போல் சத்தம் போடாமல் நான் "ட்டூர்ரிங்...ட்டூர்ரிங்" என்று ஒரு டியூனாக சத்தம் போடப் போக ஒரு தாட்டையன் (பெரிய) குரங்குக்கு என்ன எரிச்சலோ...  நான் போட்ட அந்த மியூசிக் பிடிக்கவில்லை போல, என் மேல் பாய்ந்துவிட்டது. "ஹ... யாரு எங்கிட்டயேவா...' அலறியடித்துக் கொண்டு ஒரே தள்ளாக அதை தள்ளிவிட்டு ஓடிவிட்டேன். கையில் விரல்களுக்கு மேலே ஒரு விழுப்புண்ணோடு அன்று தப்பித்தேன். பின்னாளில் குரங்குகளுக்கு அந்த மியூசிக் போட்டால் கோபம் வருமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன்.  


அதற்கப்புறம் "உலகத்திலேயே குரங்கு கடி வாங்கியிருக்கிற ஒரே ஆள் நீதான்டா'  என்று ஓட்ட ஆரம்பித்தார்கள். அதற்கு நானும் "ஆமாம் குரங்கு, குரங்கையெல்லாம் கடிக்காதாம்' என்று பதில் சொல்வேன்.

http://dubukku.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com