வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

வீடியோ கேமில் நீங்களே புகுந்து விளையாடலாம்!

By அ.சர்ஃப்ராஸ்| DIN | Published: 30th April 2019 04:04 PM


இன்றைய குழந்தைகளின் கைகளில் புத்தகங்கள் தவழ்வதற்குள் ஸ்மார்ட் போன்கள் புகுந்து விளையாடுகின்றன. 
அதுவும் வீடியோ கேம்கள் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கட்டி இழுக்கின்றன. இந்த வீடியோ கேம் உலகில் மேலும் ஒரு புதிய சுவாரசியத்தை அளிக்கும் தொழில்நுட்பத்தை முகநூல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதாவது, உங்களையே வீடியோ கேமில் புகுத்தி விளையாட வைக்கிறது. ஆம், உங்களின் நடை, உடை, பாவனைகள் அடங்கிய வீடியோவை வைத்து, வீடியோ கேமில் விளையாடும் ஒரு நபராக மாற்றிவிடுகிறது. 
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு “ஸ்ண்க்2ல்ப்ஹஹ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நீங்கள் டென்னிஸ் விளையாடுவதைப்போன்ற வீடியோவை பதிவேற்றம் செய்து விட்டால் போதும். அது உங்களின் உடல் அசைவு, 
பாவனை, நடை ஆகியவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்து கொள்ளும்.
பின்னர் அதை டென்னிஸ் வீடியோ கேமில் விளையாடும் நபராக
உங்களையே மாற்றிவிடும். பின்னர் உங்களை வைத்தே நீங்களே விளையாடிக் கொள்ளலாம். இந்த புதிய முறையை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர முகநூல் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. வீடியோ கேம் பிரியர்களை இந்த புதிய தொழில்நுட்பம்
கவரும் என்று எதிர்பார்க்கலாம். எந்தவித தொழில்நுட்பமாக இருந்தாலும் அளவுக்கு மீறி அடிமையாகாமல், தேவைக்காகவும், பொழுதுபோக்காகவும் மட்டுமே பயன்படுத்தினால் நன்மை  பெறலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மனங்கொத்தி மாணவர்கள்!
"மகிழ்ச்சி'க்காக ஒரு படிப்பு!
மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்!
தண்ணீரைத் தூய்மையாக்கும் கருவி!
இலவசமாகப் பாட நூல்கள்!