வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 189

By ஆர்.அபிலாஷ்| DIN | Published: 30th April 2019 03:44 PM

 

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது கணேஷ் புரொபஸரிடம் salon மற்றும் salon ஆகிய சொற்களின் பொருளை விளக்கும்படி வேண்டுகிறான்.

புரொபஸர்: சலோன் (salon) என்பதன் பொருளை முதலில் விளக்குகிறேன். ஒரு பொருள்  முடிவெட்டும் இடம், அழகு நிலையம். A hairdressing salon. 

கணேஷ்: சார் அது ஹேர்கட்டிங் இல்லையா? (நடாஷா வாயை பொத்தி சிரிக்கிறாள்)

கணேஷ் கோபமாய்: நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?

புரொபஸர்: ஒண்ணுமில்ல, இது ஓர் இயல்பான சந்தேகம் தான். ஒரு கிராமத்திலோ டவுனிலோ மாதாமாதம் ஒட்ட வெட்டி விடுவது தான் ஹேர்டிரஸ்ஸிங். ஒட்ட வெட்ட தெரிஞ்சவங்க தான் அங்கே பார்பர். ஆனால் இன்னிக்கு நகரங்களில் ஹேர்-டிரஸ்ஸிங் என்பது ஒரு பயிற்சி தேவைப்படுகிற கலை. முடியை டை அடிப்பது, சுருட்டுவது, நேராக்குவது, ஸ்டைலை மாற்றி முகத்தின் தோற்றத்தை மேம்படுத்துவது, முகத்தின் அமைப்புக்கு ஏற்றவாறு முடியை அழகுபடுத்துவது, முகத்தை வெளுக்க வைப்பது, இமையை வடிவமைப்பது என இன்றைய body imaging அத்தியாவசியமானதாக ஹேர்டிரஸ்ஸிங் மாறி விட்டது. ஆண்களும் பெண்களும் வாரம் ஒருமுறை சலோனுக்குப் போகிறார்கள், தாராளமாய் பணம் செலவழிக்கிறார்கள். அதனால் தான் நாம் இதை சாதாரணமாய் பார்க்கக் கூடாது. ஹேர்டிரஸ்ஸிங் என்பதில் இவ்வளவு அடங்கி உள்ளது. 

கணேஷ்: சார்... டிரெஸ்ஸிங் என்பதுக்கு இப்படியும் பொருள் உண்டா?

புரொபஸர்: ஓ... உண்டே! 

நடாஷா: சார் அதுக்கு முன்னே ஒரு விசயம். ஹேர்டிரஸ்ஸிங் என்பது நவீன வாழ்க்கையின் கிளாமர் விசயம் மட்டுமல்ல. அது நீண்ட காலமாகவே பண்பட்ட சமூகங்களில் ஒரு கலையாகக் கருதப்பட்டுள்ளது. கி.மு 400-இல் கிரேக்கத்தில் பெண்கள் தலைமுடியில் டை அடித்தார்கள் தெரியுமா? பண்டைய அசீரியன் சமூகத்தின் ஆண்கள் பெரிய சுருள் தலைமுடியை வைப்பதை நாகரிகமாய் கருதினார்கள். அதேநேரம் எகிப்தியர்களோ தலையை மழித்துக் கொண்டு விக் அணிந்தார்கள். இன்றைய curling iron பழைய ரோமானிய பெண்கள் பயன்படுத்தினது தான்.  அதற்கான accoutrements அன்றே பயன்பாட்டுக்கு வந்து விட்டது.

கணேஷ்: அதென்ன அக்கூ…?

நடாஷா: அக்கூடிரெமெண்ட். அதாவது கருவிகள். Appliances. இதற்கு accessories என்றும் பொருள் உண்டு. உதாரணமாய் ஒரு துணிக்கடையில் விற்பனைக்கு வைத்திருக்கும் உள்ளாடைகள், மேக் அப் பொருட்கள் ஆகியவற்றையும் accoutrements எனலாம். 

சேஷாச்சலம்: It is a beautiful word. It comes from a French word, I am unable to recollect... couture. என்பது ஒருவரது தோற்றத்துக்கு அளவுக்கு ஏற்ப ஆடைகளை - made}to}measure clothes - வடிவமைப்பது எனும் பொருளில் புழக்கத்தில் உள்ளது. இந்த couture இடத்தை இன்று ரெடிமேட் ஆடைகள், ready}to}wear dresses எடுத்துக் கொண்டு விட்டன.

புரொபஸர்: என் வீட்டுப் பக்கத்தில் ஒரு சின்ன டெய்லர் இருக்கார் பார்த்திருக்கியாடா?

கணேஷ்: ஆமா ஹிட்லர் டெய்லர்ஸ்.

புரொபஸர்: ஆமா, அவன் ஹிட்லரோட பெரிய விசிறி. அதே மாதிரி மீசை வச்சிருப்பான். அவன்கிட்ட என் அளவை குடுக்கணுமுன்னு அவசியமே இல்லை. கடந்த முப்பத்தைந்து வருசமா என் உடல் அளவுகள் மாறல. அதனால நான் சொன்னாலே போதும் அவனே எனக்கு பிடிச்சமான கலர்ல சட்டை பேண்ட் தைச்சு இஸ்திரி போட்டு கையில் கொடுத்திருவான். இதுவும் couture தான். 

நடாஷா: ஆனால் துல்லியமா சொன்னா இது couture இல்ல - ரொம்ப அழகா ஸ்டைலா நம்முடைய பிம்பத்தையே மேம்படுத்துற மாதிரி தைக்கக்கப்படுற ஆடைகளைத் தான் இப்படி சொல்வாங்க. உதாரணமா நயன்தாரா மற்றும் திரிஷாவோட costume designer  பேரு ஸிட்னி ஸ்லேடன். நம்மூர்காரர் தான். பேரு தான் அப்படி. இந்த ரெண்டு பேருமே கடந்த சில வருடங்களில் பார்க்க அவ்வளவு அழகா மாறினதுக்கு அவங்க அணிகிற அந்த தனித்துவமான ஆடைகள் தான் காரணம். Their couture uplift their body image, their looks and made them more elegant.

கணேஷ்: சார் அந்த பிரெஞ்ச்  சொல் என்ன?

சேஷாச்சலம்: ஆமா அதை சொல்றதை விட்டுட்டு இந்த நவீன சொல்லை சொல்லிட்டேன். இரு சொல்றேன்.

(இனியும் பேசுவோம்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மனங்கொத்தி மாணவர்கள்!
"மகிழ்ச்சி'க்காக ஒரு படிப்பு!
மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்!
தண்ணீரைத் தூய்மையாக்கும் கருவி!
இலவசமாகப் பாட நூல்கள்!