செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

பேப்பர் இல்லாத தேர்வு!

By இரா.மகாதேவன்| Published: 30th April 2019 12:28 PM

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் ஏறத்தாழ 29 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலான வனவளம் குறைந்துள்ளதாக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் e-Green Watch அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பசுமைச் சூழல் அழிப்பு அல்லது இழப்பு, வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ûஸடின் அளவு அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 

உலக வங்கியின் தகவலின்படி, இந்தியாவில் 1960 முதல் 2014 வரை ஒரு தனிநபர் வெளியிடும் கார்பன் டை ஆக்ûஸடின் அளவு 0.3 மெட்ரிக் டன்னிலிருந்து 1.7 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு, தட்பவெப்ப மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற பல தீவிர  பிரச்னைகளை ஏற்படுத்திவருகிறது.

தொழிற்சாலைகளை நிறுவுதல், பனை எண்ணெய் உற்பத்தி, காகிதம் தயாரித்தல், மரப்பொருள்களின் பயன்பாடு போன்றவையே காடுகள் அழிப்பின் முக்கிய காரணிகளாக உள்ளன. குறிப்பாக, நம் நாட்டில் ஒரு தனிநபரின் காகிதப் பயன்பாடு ஆண்டுக்கு 13 கிலோவாக உள்ளது. 

இந்த நிலையில் தான், LittleMore Innovation Labs (LMI) நிறுவனம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் உதவியுடன் பேப்பர் இல்லாத தேர்வை நடத்தி, பேப்பரின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. 
இந்த நிறுவனம்  ஸ்ரீகாந்த் கணேசன் என்பவரால் கடந்த 2014 இல் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது. அவர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் அதன் வளர்ச்சி மையத்தை அமைத்துள்ளார்.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து மணிப்பால் பல்கலைக்கழகம், சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT), மனநலன் மற்றும் நரம்பு அறிவியலுக்கான தேசிய நிறுவனம், பெங்களூரு ரேவா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து 15 லட்சம் பேப்பர் இல்லா தேர்வுகள் மூலம் 2 கோடி தாள்களைச் சேமித்துள்ளது.

இதற்காக இந்த  நிறுவனம் Paperless Examinations Advantage (PEXA) என்ற சிறப்பு மென்பொருளை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி மின்னணு அட்டையில் (E-Pad) இதற்கான பேனா மூலம் பேப்பர் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தேர்வு எழுத முடியும். 

இதுகுறித்து மணிப்பால் பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளர்   ஸ்ரீஜித் கோவிந்தன் கூறுகையில், ""எங்கள் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 8 ஆயிரம் மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 36 தேர்வுகள் நடத்துகிறோம். இதற்காக ஒவ்வொரு தேர்விலும் ஒவ்வொரு மாணவருக்கும் 20 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் புத்தகம் வழங்கப்படுகிறது. இது ஏறத்தாழ 57.6 லட்சம் தாள்களைக் கொண்ட மிகப்பெரிய பேப்பர் அளவாக உள்ளது. நாங்கள் LMI நிறுவனத்தின் டிஜிட்டல் தேர்வு தளத்துக்கு மாறிய பிறகு இந்தக் காகிதங்களை சேமிக்க முடிகிறது'' என்கிறார். 

இந்த நிலையில், பேப்பர் இல்லா தேர்வு முறைக்கு மாறுவது குறித்து LMI நிறுவனம் இந்தியாவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் பிஜு சச்சாரியா கூறுகையில், "PEXA மென்பொருளை பயன்படுத்துவதில் பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 50 சதவீத பல்கலைக்கழகங்களை பேப்பர் இல்லா தேர்வு முறைக்கு மாற ஊக்குவிப்பதே எங்களது முக்கிய குறிக்கோள்'' என்கிறார்.

ஆசிரியர்கள் தேர்வுக்குத் தேவையான சில சான்றுகளை இந்த கருவியில் உள்ளீடு செய்த பிறகு, இதிலுள்ள PEXA மென்பொருள் வினாத்தாளை பதிவேற்றம் செய்ய அனுமதிக்கிறது. பிறகு, தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் குறித்த தகவல்களை கல்வி நிறுவன நிர்வாகம் இதில் சேர்த்து பயன்படுத்த முடியும்.

தேர்வுக்கு முன்னதாக, LMI  நிறுவனத்தால் பேப்பருக்கு பதிலாக DigiTaal  எனப்படும் மின்னணு அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த கருவி, இதில் எழுதுவதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட எழுத்தாணியோடு இருக்கும். இதில் 14 மணி நேரம் மின்சக்தி அளிக்கும் மின்கலன் உள்ளது. படம் வரைவது, வண்ணம் தீட்டுவது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் பேனாக்களும் வழங்கப்படுகின்றன.

தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே இந்தத் தளத்தில் உள்நுழைய முடியும். அவர்களுடைய விரல் ரேகை, கண் கருவிழி படலம் ஸ்கேன் செய்யப்பட்டு அடையாளங்கள் உறுதிசெய்யப்படும். தேர்வு நேரத்தில் E-Pad இல் தோன்றும் வினாத்தாள், தேர்வு நேரம் முடிந்தவுடன் தானாக திரும்பப் பெறப்பட்டுவிடும்.

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்தவுடன்,   ஆசிரியர்களால் விடைகளை மதிப்பீடு செய்வதற்காக எடுத்துக் கொள்ள முடியும். தேர்வில் ஒவ்வொரு மாணவரும் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் சராசரி மதிப்பெண்களை சரியான நேரத்தில்  வெளியிட இந்த மென்பொருள் உதவுகிறது. இதற்காக, தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த மென்பொருளை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 

ஆசிரியர்களின்  விடை மதிப்பீடு போன்ற சேவைகள் இப்ர்ன்க் தளத்திலும், மாணவர்கள் உள்நுழைதல், கேள்விகளுக்கு விடையளித்தல் போன்ற எஞ்சிய செயல்பாடுகள் அனைத்தையும் இணைய இணைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மன்னனும்... மாணவர்களும்!
கணினிக்கு ஓர் இணையதளம்!
கட்டுமானத் தொழில்; இளைஞர்களுக்கு பயிற்சி!
ஒப்பீடு!
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 200 - ஆர்.அபிலாஷ்