வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

தெரிந்து கொள்வோம்: இந்திய கால்நடை  ஆராய்ச்சி நிறுவனம்

By  - எம். ஞானசேகர்| DIN | Published: 30th April 2019 03:32 PM

 

1889 -ஆம்  ஆண்டு  தொடங்கப்பட்ட  இந்திய அரசின்  மாபெரும்  ஆராய்ச்சி நிறுவனம்,  இன்று மிகப் பெரிய  கால்நடை  ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாய் வளர்ந்துவிட்டது.  மேற்படிப்பு,  ஆராய்ச்சி, கருத்தரங்குகள்   என்று நின்றுவிடாமல்  தொழில் முனைவோருக்கு  கால்நடைத் துறையில்  உதவும் மாபெரும் மையமாக  உருவெடுத்துள்ளது.  புதிய தொழில் உத்திகள், கண்டுபிடிப்புகளை  தொழில்முனைவோருக்கு   கொடுத்து  உதவுகிறது.

கால்நடை  மருத்துவர்கள்,  ஆராய்ச்சி  கூட  ஊழியர்கள், விவசாயிகள், பெண்கள், தொழில் முனைவோருக்கு   தொழில் முனைவோர் மேம்பாட்டுப்  பயிற்சி அளிக்கிறது.  புதிய தொழில்  நுட்பங்கள், தடுப்பு மருந்துகள், புதிய உணவுகள், மண்புழு   தயாரிப்பு என பல புதிய கண்டுபிடிப்புகளை  கால்நடைத் துறையில் உருவாக்கியுள்ளது.

இதற்கு  தலைமை அலுவலகம்  உத்தரபிரதேசம்,  ரேபரேலியிலும்,  கிளை ஆராய்ச்சி  மையங்கள் முக்தேஷ்வர்,  பெங்களூரு, பாலம்பூர்,  போபால், கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரில்  அமைந்துள்ளது.  41 வகை  படிப்புகள்  இந்த இன்ஸ்டிடியூட்களில்  நடத்தப்படுகின்றன.  இத்துறை  புதிய கண்டுபிடிப்புகளுக்கு  உரிமை பெற்றுத் தருகிறது.  இந்தியா  முழுவதும் உள்ள கால்நடைப்  பல்கலைக்கழகங்களுக்கு,  ஆராய்ச்சி  உதவிகளை  அளிக்கிறது.

சான்றிதழ்  படிப்பு  முதல் பி.எச்.டி  வரை இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளன. இந்தியா முழுவதும்  கருத்தரங்குகள்  நடத்துதல்,  விவசாயிகளுக்கு  பலவகை விழிப்புணர்வு  முகாம்கள் நடத்துதல்  என கால்நடை  வளர்ப்பவர்களுக்கு உதவுகிறது.   

மேலும் தெரிந்து கொள்ள:

Director, Indian Veterinary
Research Institute, Izatnagar-243122, Bareilly, U.P.
E-mail : dirivri@ivri.res.in, director.ivri@icar.org.in,
directorivri@gmail.com

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மனங்கொத்தி மாணவர்கள்!
"மகிழ்ச்சி'க்காக ஒரு படிப்பு!
மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்!
தண்ணீரைத் தூய்மையாக்கும் கருவி!
இலவசமாகப் பாட நூல்கள்!