தினமணி கொண்டாட்டம்

காவல் அலுவலருக்கு விருது வழங்கிய காமராஜர்

1st Oct 2023 12:00 AM | முக்கிமலை நஞ்சன்

ADVERTISEMENT


காமராஜர் முதல்வராக இருந்தபோது,  சென்னையில் முக்கிய குற்றவாளி சிறையில் இருந்து தப்பிவிட்டார். உடனே காவல் துறையினர் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டனர். 

அப்போது,  சாலை வழியே ஒரு கறுப்பு கார் சென்றது. ஒரு காவல் துறை அலுவலர்,  அந்த காரை கைநீட்டி மறித்தார். ஓட்டுநருக்கு ஒன்றுமே புரியவில்லை.  இருப்பினும் காரை நிறுத்தினார்.  

உடனே காவல் துறை அதிகாரி ஓட்டுநரிடம், "காரை சோதனையிட வேண்டும். உள்ளே இருப்பது யார்?'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.  

உள்ளே இருந்த காமராஜர் கண் விழித்துப் பார்த்தார். அந்த அதிகாரியை அழைத்து, பெயரையும் பணிபுரியும் இடத்தையும் எழுதி வாங்கிக் கொண்டார்.

ADVERTISEMENT

"நமது வேலை போய்விடும்'' என்று கவலையில் இருந்தார் காவல் அலுவலர். "எப்போது வேண்டுமானாலும் தண்டனை கிடைக்கும்'  என்றும் அதிர்ச்சியில் ஆழ்ந்தார் அவர்.

அந்த ஆண்டின் சிறப்பாகப் பணிபுரிந்த காவலர் என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார் முதல்வர் காமராஜர். இதை அறிந்தவுடன் காவல் அலுவலருக்கு மிக்க சந்தோஷம் அடைந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT