தினமணி கொண்டாட்டம்

தீபாவளி ரேஸில் ஜப்பான் 

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

 

கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகிகிறது ஜப்பான்.  ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. ஒரு க்ரைம்  த்ரில்லராக உருவாகும் இப்படம் மனித வேட்டையையும் உள்ளடக்கியது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் ஆழமாக பின்னப்பட்டுள்ளன. மேலும் பல ஆரவாரமான அம்சங்களும் கொண்ட தனித்தன்மை கூட்டணியாக உருவாகி வருகிறது'' என்கிறார் நாயகன் கார்த்தி. ""ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் துணிச்சலான மற்றும் உற்சாகமான அதேசமயம் ஆர்ப்பாட்டமில்லாத இந்த கதாபாத்திரமும்  ராஜூ முருகனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வமும் தான் என்னை இந்த படத்துக்குள் இழுத்து வந்தது. "குக்கூ' மற்றும் "ஜோக்கர்' என அவருடைய முந்தைய இரண்டு படங்களை நான் ரொம்பவே ரசித்திருக்கிறேன். மேலும் இந்த சமூகம், இங்குள்ள கலாசாரம் குறித்த அவரது புரிதல் ரொம்பவே அழகானது'' என்கிறார் கார்த்தி..

குறிப்பாக வாழ்க்கை, ரொமான்ஸ், நட்பு மற்றும் மதுபோதை ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக ராஜூ முருகன் எழுதிய "வட்டியும் முதலும்' என்கிற அவரது கட்டுரை தொகுப்பும் மேலும் அதை தழுவி "ஜப்பான்' போன்ற ஒரு க்ரைம் கதை உருவானதும் திகைப்பாக இருக்கிறது சர்வதேச அளவிலான பார்வையாளர்களை கவரும் விதமான சாத்தியம் இந்த ஜப்பான் படத்துக்கு இருக்கிறது. அதனால் தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் வரவேண்டும் என நான் விரும்பினேன். அவருடைய பார்வை இப்படத்தை மாற்றும் என நாங்கள் நம்பியதை போலவே நாங்கள் இப்போது சாதித்திருக்கிறோம் என்றும் நினைக்கிறேன். பக்காவான உள்ளூர் சுவையில் அதேசமயம் உலகத்தரத்தில் இதை வழங்குகிறோம்'' என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.

ADVERTISEMENT
ADVERTISEMENT