தினமணி கொண்டாட்டம்

பித்தல மாத்தி 

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ்  நிறுவனம் சார்பில் ஜி. சரவணன் தயாரித்து வரும் படம் "பித்தல மாத்தி'. இப்படத்தின் கதாநாயகனாக  உமாபதி இராமையா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சம்ஸ்கிருதி நடிக்கிறார்.  கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு "பித்தல மாத்தி' என பெயரிடப்பட்டிருக்கிறது. பால சரவணன், வினுதாலால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன்,  "ஆடுகளம்' நரேன், "காதல்' சுகுமார் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார்.  மோசஸ் இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஏ. எல். ரமேஷ் கவனிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை மாணிக்க வித்யா இயக்குகிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின்இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 

அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரவுள்ளது.  படம் குறித்து இயக்குநர் பேசும் போது... "" பித்தல மாத்தி என்றால் கேடித்தனம்.. தகிடு தத்தம்.. செய்பவர்களை குறிக்கும். மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாமும் இருந்துக் கொண்டே இருக்கிறது. கொஞ்ச சதவீதம் கூடிக் குறைந்து இருந்தால் நாமே நல்லவன், கெட்டவன் என்று பிரித்து சொல்லி விடுகிறோம். கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான முயற்சியும், அவனை வேறு திசைக்கு கொண்டு போகிற முயற்சியும் நடக்கிறது.

ADVERTISEMENT

கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதே கதை'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT