தினமணி கொண்டாட்டம்

கைக்கடிகாரத்தின் வரலாறு!

4th Jun 2023 12:00 AM | ராஜி ராதா

ADVERTISEMENT

 

கடிகாரத்தை அணிகிறோம். இதன் வரலாறு தெரியுமா?

16-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. 1571-ஆம் ஆண்டு எரில் லிசெஸ்டா பிரபு ராபர்ட் டட்லி ஒரு கை கடிகாரத்தை ராணி எலிசபெத் 1-க்கு அன்பளிப்பாக வழங்கினார். இருந்தாலும் கைக்கடிகாரங்கள் 1880-இல் ஜெர்மனி தன்னுடைய கடற்படை வீரர்கள் அனைவருக்கும்  அன்பளிப்பாக வழங்கியதால்தான் பிரபலமானது. 1926-இல் ரோலக்ஸ் கடிகார நிறுவனமானது நீர்ப்புகாத, தூசி புகாத கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்தது.  இதனால்,  அதன் பயன்பாடு மேலும் பிரபலமானது. 1971-இல் டிஜிட்டல் கைக்கடிகாரங்களை இரு அமெரிக்க பொறியாளர்கள் உருவாக்கினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT