தினமணி கொண்டாட்டம்

கிராமிய பாடல்களுக்கு அங்கீகாரம்

4th Jun 2023 03:53 PM

ADVERTISEMENT

 

கிராமியப் பாடகராக ஒலித்த அந்தோணிதாசனின் குரல் இப்போது திரையிலும் படு பிஸி. இப்போது இவர் வெளியிட்டுள்ள "ஆசை மச்சான்....' என்ற ஆல்பத்துக்கு இணையத்தில் பரவலான வரவேற்பு. இதுகுறித்து அந்தோணிதாசன் பேசும்போது... ""ஆசை மச்சான்...' ஆல்பத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. என் மனைவி ரீத்தாவுக்காக இந்த ஆல்பத்தை உருவாக்கினேன்.

கடந்த 2010- ஆம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்வில் " மச்சான் மச்சான்....' என்ற ஒளி நாடாவை வெளியிட்டேன். என் மனைவி, பாடகர்கள் பரிக்கல் சுரேஷ், லெட்சுமி, சந்துரு ஆகியோருடன் அந்தப் பாடல்களை பாடி இருப்போம். அதில் என் மனைவி பாடிய "மச்சான் மச்சான் ஆசை மச்சான்...' என்ற பாடல் இசைக் கலைஞர்கள் மத்தியில் பரவலாக பரப்பப்பட்டு, அதன் மூலம் சின்னத்திரை வாய்ப்புகள் பாடகர்களுக்கு கிடைத்தன. அதில் ஒரு தம்பதியினர் குறிப்பிட்ட டி.வி. நிகழ்ச்சியில் அந்த பாடலைப் பாட அனுமதி கேட்டனர். உடனே அனுமதி தந்தேன். பாடல் வைரலானது. இப்போது மேடைகளில் நாங்கள் பாடப் போகும் போது குறிப்பிட்ட பாடகியின் பெயரைச் சொல்லி, அவர் பாட்டை பாடுங்க... என்று என் பாட்டையே என் மனைவி பாடிய எங்களிடம் கேட்கும் போது மனசுக்கு வருத்தமாக இருக்கிறது. சின்னத்திரையில் பாடும் கலைஞர்களை வளர்க்கும் நோக்கில் நிறைய நிகழ்ச்சிகள் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாடும் இளம் தலைமுறையினரும் ஆர்வமுடன் பாடி வளர்ந்து வருகிறார்கள். இந்தப் படைப்பாளர்களுக்கு உண்டான அங்கீகாரத்தை சின்னத்திரை சார்ந்த இது போல் நிகழ்ச்சி நடத்துபவர்கள் அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும்'' என்றார்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT