தினமணி கொண்டாட்டம்

நந்தனம் உருவான வரலாறு..!

22nd Jan 2023 06:00 AM | விருகை பட்டாபி

ADVERTISEMENT

 

சென்னை மாகாணத்தில் (இப்போது தமிழ்நாடு) 1952-இல் முதல்வராக இருந்த சக்கரவர்த்தி ராஜாஜியால் உருவாக்கப்பட்ட பகுதிதான் நந்தனம்.

அவர் பதவி வகிக்கும் காலத்தில் சென்னை மேம்படுத்தப்பட்டது. அப்போது, ஒரு பகுதி மேம்படுத்தப்பட்ட குடியிருப்புப் பகுதியாக உருவாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லாம் கலந்து பேசினர். அந்தப் பகுதிக்கு முதல்வர் ராஜாஜியின் பெயரைச் சூட்ட முடிவு செய்தனர். இதுகுறித்து அவர்கள் முதல்வரை சந்தித்துப் பேசுகின்றனர்.  அந்தக் குடியிருப்பு  குறித்து பல்வேறு விவரங்களை ராஜாஜியும் கேட்டறிகிறார்.

இறுதியில் அதிகாரிகள், "குடியிருப்புப் பகுதிக்குத் தங்கள் பெயரை சூட்டுவதற்கு ஒப்புதல் தர வேண்டும்'' என்றனர்.  இதைக் கேட்ட ராஜாஜியின் முகம் மாறிவிட்டது.

ADVERTISEMENT

"என்னது எனது பெயரா? சுத்த அபத்தமாக இருக்கிறதே? வேறு பெயரை உங்களுக்குத் தோன்றவில்லையா? என சிறிது கடுமையாகப் பேசினார். இதைக் கேட்ட அரசு அதிகாரிகள் திகைத்து நின்றனர்.

"ஐயா. நீங்களே ஏதேனும் ஒரு பெயரைச் சொல்லி விடுங்கள்'' என்றனர் அதிகாரிகள். இதை கேட்ட ராஜாஜியும், "" இந்த ஆண்டின் தமிழ்ப் பெயர் என்ன?'' என்றனர் அதிகாரிகள். ஒரு கனம் யோசித்த  அதிகாரிகள், ""நந்தன வருஷம்'' என்றனர்.

"ம். சரி. அந்தப் புதிய குடியிருப்புக்கு "நந்தனம்' என பெயர் சூட்டுங்கள்'' என்றார் ராஜாஜி.  இப்படிதான் நந்தனம் பகுதி உருவானது. இதன் வயது தற்போது 70 நிறைவுற்று, 71-வது ஆண்டைத் தொடங்கியுள்ளது.  இப்படியும் ஓர் முதல்வர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT