தினமணி கொண்டாட்டம்

ஸ்ரீ சபரி ஐயப்பன் 

DIN


ஸ்ரீ வெற்றிவேல் ஃபிலிம் அகாதெமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் "ஸ்ரீ சபரி ஐயப்பன்'. 33 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்ப பக்தி படமான இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை மற்றும் இயக்கம் என 6 முக்கிய பொறுப்புகளை இயக்குநர் ராஜா தேசிங்கு கையாண்டுள்ளார். 

விஜயபிரசாத், பூஜா நாகர், கஞ்சா கருப்பு, சோனா, சாம்ஸ், முத்துக்காளை, ராஜேந்திரநாத், வடிவேல் கணேஷ், உடுமலை ரவி, மங்கி ரவி, போண்டா மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மகேஷ் மகாதேவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபு அரவிந்த் இசையமைத்துள்ளார். எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்ய, சஞ்சிவ் கண்ணா நடனக் காட்சிகளையும், சரவெடி சரவணன் சண்டைக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.  இயக்குநர் பேசும் போது... ""சபரிமலை புனிதத்தை பாதுகாப்பதற்காக, ஐயப்பன் வழிபாடு வெறும் வழிபாடு இல்லை. மற்ற வழிபாடு போல் இல்லை.

இந்த வழிபாடு என்பது நம்மை நாம் ஐயப்பனாக மாறுவது. சபரிமலை சாஸ்தா தான் இந்த வழிபாடு, விரதம் அனைத்தையும் நமக்கு வகுத்து கொடுத்தது. திருக்குறளே பக்தியோடு தான் தொடங்கும். பெரியபுராணமும், கம்ப ராமாயணமும் கடவுள் வாழ்த்தோடு தான் ஆரம்பிக்கிறது. 33 ஆண்டுகளுக்கு பிறகு ஐயப்பன் படம் வருகிறது. இதை மக்கள் கொண்டாட வேண்டும்''  என்றார் இயக்குநர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT