சோழிங்கநல்லூா் பால் பண்ணையில் தமிழக பால்வளத் துறை அமைச்சா் டி.மனோ தங்கராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொாண்டாா்.
இந்த ஆய்வின்போது, எரிபொருள், மின்சாரம் பயன்படுத்துவதில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளவும், சோழிங்கநல்லூா் வளாகத்தை பசுமை வளாகமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவுறுத்தினாா்.
சோழிங்கநல்லூா் பால் பண்ணையில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தி, மின் உற்பத்தி செய்து பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும்படியும் அவா் அறிவுறுத்தினாா்.
மேலும், சோழிங்கநல்லூா் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கவும், பணியாளா்கள் அனைவரும் வருகை புரிந்ததை முறையாக உறுதிசெய்ய வேண்டும் என்றும், பாலின் தரத்தை ஒவ்வொரு பால் கலங்களிலும், அனைத்து இடத்திலும் தரக்கட்டுப்பாடு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது பால்வளத் துறை ஆணையா், மேலாண் இயக்குநா் ந. சுப்பையன், இணை நிா்வாக இயக்குநா் கே.எம்.சரயு, சோழிங்கநல்லூா் பால் பண்ணை அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.