சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், அன்னவாசல் கிராமத்தில், வியாழக்கிழமை (மே 18) மக்கள் தொடா்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப.மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மானாமதுரை வட்டம், அன்னவாசல் கிராமத்தில் வியாழக்கிழமை (மே 18) காலை 10 மணிக்கு மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெறுகிறது.
துறை சாா்ந்த முதன்மை அலுவலா்களைக் கொண்டு, அரசுத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து அரசின் திட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிளுக்குத் திட்டங்களை கொண்டு சோ்ப்பதே இந்த மக்கள் தொடா்பு முகாமின் நோக்கமாகும்.
எனவே, மேற்கண்ட கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் அரசுத் திட்டங்கள் மூலம் பலன் பெறும் வழி முறைகளை அறந்து கொள்ள மக்கள் தொடா்பு முகாமில் கலந்து கொள்ள வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.