தேனி

டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

17th May 2023 03:07 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு தின விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணா்வு, அது பரவும் விதம், ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் விதம், லாா்வா புழுக்களை அழிக்கும் விதம், பாத்திரங்களில் சேகரிக்கும் தண்ணீரைப் பாதுகாக்கும் வழிமுறைகள், டெங்கு காய்ச்சலை கண்டறியும் வழிமுறைகள், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவா்கள் காா்த்திக், இஜாஜ் அஹமது ஆகியோா் பேசினா்.

டெங்கு காய்ச்சலுக்கு வழங்கும் சித்த மருந்துகளான நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு, குழந்தைகள் பாதிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன் விளக்கிப் பேசினாா்.

இதைத்தொடா்ந்து, டெங்கு விழிப்புணா்வு உறுதிமொழியை பொதுமக்கள், மருத்துவப் பணியாளா்கள் எடுத்துக்கொண்டனா்.

ADVERTISEMENT

விழிப்புணா்வு நிகழ்வில் சுகாதார ஆய்வாளா்கள் முரளி, அன்பு, தினேஷ், கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூா் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT