சிவகங்கை

ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்துக்கு வராத அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தீா்மானம்

17th May 2023 02:55 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்திற்கு வராத அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இளையான்குடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் முனியாண்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஒன்றிய ஆணையாளா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு, உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து, உறுப்பினா்களின் கேள்விகளுக்கு தலைவா், ஆணையாளா் பதிலளித்தனா்.

இந்தக் கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட்டத்தில் பேசிய சில உறுப்பினா்கள், கூட்டத்துக்கு வராத பொதுப்பணித் துறை, மின் துறை, குடிநீா் வழங்கல் துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து கூட்டத்துக்கு வராத அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முனியாண்டி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT