தினமணி கொண்டாட்டம்

பாலிவுட்டில் சாம் சி.எஸ். 

25th Sep 2022 06:00 AM

ADVERTISEMENT

 

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்போது பாலிவுட் சினிமாவுக்கு சென்றுள்ளார். "விக்ரம் வேதா' ஹிந்திப் பதிப்பின் மூலம் பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
"ஓர் இரவு' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் சி.எஸ். "விக்ரம் வேதா' மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் மொழி தாண்டி இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. அப்படத்தின் தீம் இசை பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது. இசையில் தனித்துவம் காட்டி தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கினார். "கண்ணம்மா....' மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது. "கைதி', "அடங்க மறு', "சாணிக்காயிதம்', "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', "சுழல்' என இவரின் தொடர்ச்சியான இசைப்பயணம் கவனிக்க வைக்கிறது.
சமீபத்தில் வெளியான "ராக்கெட்ரி' படமும் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. ராக்கெட்ரி வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "விக்ரம் வேதா' படத்தின் இந்திப்பதிப்பு ட்ரெய்லர் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் இசைக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார் சாம் சி.எஸ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT