தினமணி கொண்டாட்டம்

தமிழில் ஹாலிவுட் கதை

25th Sep 2022 06:00 AM

ADVERTISEMENT

 


இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் எழுதி இயக்கி வரும் படம் "மர்டர் லைவ்'. வினய் ராய்,  ஷர்மிளா மாண்ட்ரே, நவோமி வில்லோ உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரசாந்த் டி. மிஸாலே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு  ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்திருக்கிறார்.  கிராபிக்ஸ் காட்சிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டி கிரியேட்டிவ் எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.  டாட் காம் எண்டர்டெய்ன்ட் லிமிடெட் தயாரிக்கிறது.

இயக்குநர் பேசும் போது.... ""ஹாலிவுட்டில் வெளியான "ப்ளைன்ட் டேட்', "ஸ்கை ஹை', "டெர்மினல் எக்ஸ்போசர்', "கிளிட்ச்', "இன் தி கோல்ட் நைட்' ஆகிய படங்களை எழுதி, இயக்கி, தயாரித்த தயாரிப்பாளர் நிக்கோ மாஸ்டோராகிஸ் இயக்கத்தில் வெளியான "டாட் காம் ஃபார் மர்டர்' என்ற ஆங்கில படத்தை தழுவி "மர்டர் லைவ்' உருவாகி வருகிறது. புத்திசாலித்தனத்துடன் கூடிய க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இதன் திரைக்கதை புதுமையாகவும், பிரம்மாண்டமாகவும்  இருக்கும். 

ஒரு சைக்கோ கொலையாளிக்கும், நான்கு பெண்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்கள்தான்  திரைக்கதை. இந்தப் படம் முழுவதும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் நாயகன் உலகில் அனைத்து இடத்திலும் இருக்கும் கணினி மூலமாகவோ... இணையதளம் மூலமாகவோ.. ஊடுருவி, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அரங்கேற்றுவார்.  எளிதில் யூகிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்களும் ரசிகர்களை வியக்க வைக்கும் என்றார் இயக்குநர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT