தினமணி கொண்டாட்டம்

முதன் முதலாக என்.எஸ்.கே.

25th Sep 2022 06:00 AM

ADVERTISEMENT

 


என்.எஸ்.கே.  என்ற என்.எஸ்.கலைவாணர் முதன்முதலாக நடித்த படம் "சதி லீலாவதி' என்றாலும்,  அது சில காரணங்களால் வெளிவர தாமதமானது.  முதலில் வெளிவந்த படம் "மேனகா' தான்.
"சதி லீலாவதி' படம் வந்ததும் என்.எஸ்.கே. முதன்மைச் சிரிப்பு  நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்துவிட்டார்.  இதன் படப்பிடிப்பின்போது,  கலைவாணர் சில திருத்தங்களைச் சொல்வார். ஆனால், பிரபலமாக இருந்த நடிகர் எம்.எஸ்.முருகேசன், ""நீ சும்மா இரு!'' என்று அடக்கிவிடுவார். 
இதைக் கவனித்த அந்தப் பட இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கன் உடனடியாக முருகேசனை வெளியே அனுப்பிவிட்டு, "என்.எஸ்.கே. சொல்லட்டும்' என்பார்.
அப்போதே முதல் படத்திலேயே 
சிரிப்புப் பகுதிகளை என்.எஸ்.கே. தயாரித்து அளித்தார். இதைத் தொடர்ந்து, "சந்திரகாந்தா', "பாலாமணி', "வசந்த சேனா' என்று பல படங்களில் வாய்ப்புகள் 
வந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT