தினமணி கொண்டாட்டம்

அழகான வெற்றிகள்

18th Sep 2022 04:29 PM

ADVERTISEMENT

 


சினிமாவில் படித்தவர்களின் வரவு இப்போது அதிகரித்துள்ளது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்தான்  ரஞ்சனா. இவரது முழுப் பெயர் ரஞ்சனா நாச்சியார். இவர்  மென்பொருள் பொறியியலில் எம்.எஸ்.ஸியும், மென்பொருள் பொறியியலில் எம். டெக்., மற்றும் சட்டத்துறையில் எல்.எல்.பி (ஹானர்ஸ்)படித்து விட்டு சினிமாவில் நடிக்க வந்துள்ளார். 

அண்ணாத்த, டைரி உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெளிச்சம் கொடுத்துள்ளது. ""எனக்கு கலையார்வம் உண்டு. அதே வேளை முடியாது என்பது கிடையாது என்கிற மன தைரியமும் உண்டு. அப்படி நடிப்பு வாய்ப்பு வந்தபோது அதிலும் போய் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன்.   பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும்.   கதைதான் முக்கியம். 

அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும்'' என்றார்.    
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT