தினமணி கொண்டாட்டம்

100-ஐ நெருங்கும் சூப்பர்குட் பிலிம்ஸ் 

2nd Oct 2022 04:29 PM

ADVERTISEMENT

 

தமிழில் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆர்.பி.செளத்ரியின் "சூப்பர்குட் பிலிம்ஸ்' நிறுவனம். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக படத்தயாரிப்பில் 95 படங்கள் என்கிற பிரமாண்ட இலக்கை இந்த நிறுவனம் எட்டியுள்ளது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 94-ஆவது படமாக சிரஞ்சீவி நடிக்கும் "காட்பாதர்' படம் தயாராகி உள்ளது. சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் சய பிரசாத் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இயக்குநர் மோகன்ராஜா இயக்கியுள்ளார். சூப்பர்ஹிட்டான "லூசிபர்' படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி உள்ளது.
அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் பாலிவுட் நடிகரான சல்மான்கான் முதல் முறையாக தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள படம் இது. வில்லனாக சத்யதேவ் நடிக்க, மற்றும் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன், சுனில், முரளி சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபரில் இந்தப் படம் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இதை தொடர்ந்து சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 96-ஆவது படமாக பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் மலையாளத்தில் " ஹனுமான் " மற்றும் தமிழில் "டாப் கியர்' படம் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஆர். பி. சௌத்ரியின் மகனும், நடிகருமான ஜீவாவிடம் சூப்பர் குட் பிலிம்ஸின் 100 -ஆவது படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசும் போது.... கண்டிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் 100-ஆவது படம் உருவாகும் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT