தினமணி கொண்டாட்டம்

மீண்டும் ஒரு பான் இந்தியா படம்  

2nd Oct 2022 04:32 PM

ADVERTISEMENT

 


"கே. ஜி .எஃப்.' இரு பாகங்கள், "777 சார்லி', "விக்ராந்த் ரோணா' என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் இந்தியா முழுமைக்கும் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இதனால் இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இந்த வரிசையில் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் "கப்ஜா' படத்திற்கும் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. கேங்ஸ்டர் வித் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிவுள்ள இப்படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ்ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ. ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கே. ஜி. எஃப். படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை மகேஷ் ரெட்டி கவனிக்க, சண்டைக்காட்சிகளை ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், வினோத் என நான்கு சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.

கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர். சந்துரு இயக்கியுள்ளார். படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. 1947-ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லுவதே திரைக்கதை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT