தினமணி கொண்டாட்டம்

மீண்டும் வருகிறார் நிஷாந்தி

27th Nov 2022 06:00 AM

ADVERTISEMENT


1990-களில் பிரபல நடிகையாக இருந்தவர் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா. இவர் நடிகை பானுப்ரியாவின் தங்கை . "எங்க ஊரு பாட்டுக்காரன்' , "நேரம் நல்லா இருக்கு', "ரயிலுக்கு நேரமாச்சு', "சிகப்பு தாலி' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம், இல்லறம், குழந்தை வளர்ப்பு என ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகினார். தற்போது மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். இந்த முறை வெப் சீரிஸ் மூலம் தனது கலை பயணத்தை தொடங்குகிறார்.

எம் எக்ஸ் பிளேயரின் சமீபத்திய வெளியிடான "தாராவி பேங்க்' வெப் சீரீஸில் நடித்துள்ளார்.

இதில் சுனில் ஷெட்டியின் சகோதரியாக போனம்மா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் . வலுவான கதாபாத்திரமாக அமைந்துள்ள அவரது சித்தரிப்பு ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த வெப் சீரிஸþக்கும், நிஷாந்தியின் கதாபாத்திரத்திரத்துக்கும் பரவலான வரவேற்பை தந்துள்ளனர். இதை தவிர்த்து சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான "சரோஜினி நாயுடு - தி அன் சாங் ஃப்ரீடம் ஃபைட்டர்' என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது குறித்து அவர் பேசும் போது.... "" வரும் காலங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிகம் நடிக்க இருக்கிறேன். தமிழ் சினிமா நல்ல இயக்குநர்கள் என் நடிப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்'' என நிஷாந்தி தெரிவித்துள்ளார் .

ADVERTISEMENT
ADVERTISEMENT