தினமணி கொண்டாட்டம்

ஜூலை 1-இல் "அந்தகன்'

22nd May 2022 05:12 PM

ADVERTISEMENT


ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பைப்  பெற்று மூன்று தேசிய விருதுகளை வென்ற படம், "அந்தாதுன்'.  பாலிவுட்டில் வெளியாகி இந்தியா முழுமைக்குமான ரசிகர்களைப் பெற்ற இந்தப் படம் தற்போது தமிழில் "அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த், சிறு இடைவெளிக்குப் பின்னர் இந்தப் படத்தில் நடிக்கிறார். 

கடைசியாக தெலுங்கில் ராம்சரண் கதாநாயகனாக நடித்த "வினய விதய ராமா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு,  பிரியா ஆனந்த்,  கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரைக்கதையை எழுதி தயாரித்து, இயக்குகிறார் தியாகராஜன். 

ஜூலை 1-ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது.  கலைப்புலி எஸ். தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார். 

ADVERTISEMENT

இதுகுறித்து தியாகராஜன் பேசியதாவது:

""நமக்குள் ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமா காட்ட ஆசைப்பட்டுதான் இதை எடுத்தேன். 

படிக்கிற புத்தகம் மாதிரி, பார்த்து வளர்ந்த சினிமா மாதிரி இதுவும் ரொம்பவே எளிமையானது.  பெரிய திட்டம் எதுவும் இல்லை. இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம் என்றார்தியாகராஜன். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT